தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-646

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

646.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த பாடத்தில் இப்னு உமர் (ரலி), உம்மு ஸலமா (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ் வந்துள்ளது.

அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் இந்த அறிவிப்புச் சங்கிலியில் கரீப் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். ஸஃத் பின் ஸினான் என்பவர் குறித்து அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இவ்வாறே லைஸ் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் யஸீத் பின் அபீ ஹபீப் வழியாக ஸஃத் பின் ஸினான் வழியாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து கூறுகிறார். அம்ர் பின் ஹாரிஸ் மற்றும் இப்னு லஹீஆ ஆகியோர் யஸீத் பின் அபீ ஹபீப் வழியாக ஸினான் பின் ஸஃத் வழியாக அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கூறுகின்றனர்.

முஹம்மத் (எனும் புகாரி இமாம்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: ஸஹீஹானது ஸினான் பின் ஸஃத் என்பதே ஆகும்.

அவரது “ஸகாத்தில் வரம்பு மீறுபவன் அதை தடுப்பவனை போன்றவன்” என்ற அவரது கூற்றின் பொருள், வரம்பு மீறுபவன் மீது தடுப்பவன் தடுத்தால் ஏற்படும் பாவம் போன்று பாவம் உண்டு என்பதாகும்.

(திர்மிதி: 646)

بَابُ مَا جَاءَ فِي المُعْتَدِي فِي الصَّدَقَةِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«المُعْتَدِي فِي الصَّدَقَةِ كَمَانِعِهَا»

وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، وَأُمِّ سَلَمَةَ، وَأَبِي هُرَيْرَةَ.: «حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ تَكَلَّمَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ فِي سَعْدِ بْنِ سِنَانٍ»، وَهَكَذَا يَقُولُ اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،  وَيَقُولُ عَمْرُو بْنُ الحَارِثِ، وَابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سِنَانِ بْنِ سَعْدٍ، عَنْ أَنَسٍ. وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ: «وَالصَّحِيحُ سِنَانُ بْنُ سَعْدٍ»، وَقَوْلُهُ: «المُعْتَدِي فِي الصَّدَقَةِ كَمَانِعِهَا»، يَقُولُ: عَلَى المُعْتَدِي مِنَ الإِثْمِ كَمَا عَلَى المَانِعِ إِذَا مَنَعَ.





 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.