அபூதர் (ரலி) அறிவித்தார்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்து ஒரு கழுதையில் சவாரி செய்த போது சூரியன் அஸ்தமித்தது. அப்போது இது எங்கே அஸ்தமிக்கிறது தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனின் தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது சூடான நீரில் மறைகிறது என்று கூறினார்கள்.
(அபூதாவூத்: 4002)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ
كُنْتُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى حِمَارٍ، وَالشَّمْسُ عِنْدَ غُرُوبِهَا فَقَالَ: «هَلْ تَدْرِي أَيْنَ تَغْرُبُ هَذِهِ؟» قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ «فَإِنَّهَا تَغْرُبُ فِي عَيْنٍ حَامِيَةٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4002.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17760-ஸுஃப்யான் பின் ஹுஸைன் என்பவர் பற்றி சிலர் பாராட்டியிருந்தாலும் இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவர் தான் அறிவிக்கும் செய்தியில் அதிகம் தவறிழைப்பவர் என்றும், உஸ்மான் பின் அபீ ஷைபா அவர்கள், இவரின் ஹதீஸில் குளறுபடி உள்ளது என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இவர் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியில் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் ஹாஃபிள் (நினைவாற்றல் உள்ளவர்) அல்ல என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/54)
இந்த செய்தியை மற்றவர்கள் அறிவிக்கும் வார்த்தைக்கு மாற்றமாகவே இவர் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க: புகாரி-3199 .
சமீப விமர்சனங்கள்