தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-758

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.

இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 4

(முஸ்லிம்: 758)

باب إذا شَهِدت المرأة العشاء فلا تمسَّ طيبًا

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْنَبَ الثَّقَفِيَّةَ، كَانَتْ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ

«إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَطَيَّبْ تِلْكَ اللَّيْلَةَ»


Tamil-758
Shamila-443
JawamiulKalim-678




  • இந்தக் கருத்தில் வரும் சில செய்திகள், பெண்கள் வாசனை திரவியம் பூசிக்கொண்டு ஷாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று வந்துள்ளது.
  • சில செய்திகள் பெண்கள் வாசனை திரவியம் பூசிக்கொண்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று வந்துள்ளது.

இவ்விரண்டில் முதல் கருத்தில் வரும் செய்திகளே மிக பலமாக உள்ளன. காரணம் இரண்டாவது கருத்தில் வரும் செய்திகளை ராவீ-41097-இப்னு அஜ்லான், ராவீ-25382-இப்னு லஹீஆ, ராவீ-11282-ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் போன்றோர் மட்டுமே அறிவித்துள்ளனர். இம்மூவரும் சிறிது நினைவாற்றல் சரியில்லாதவர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்கள். (ஆய்வில்..)

1 . இந்தக் கருத்தில் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-758759 , நஸாயீ-,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4174 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.