அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 4
(முஸ்லிம்: 760)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي فَرْوَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ»
Muslim-Tamil-760.
Muslim-TamilMisc-675.
Muslim-Shamila-444.
Muslim-Alamiah-675.
Muslim-JawamiulKalim-680.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் வரும் சில செய்திகள், பெண்கள் வாசனை திரவியம் பூசிக்கொண்டு இஷா_த் தொழுகைக்கு வரக்கூடாது என்று வந்துள்ளது.
2 . சில செய்திகள் பெண்கள் வாசனை திரவியம் பூசிக்கொண்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று நேரத்தைக் குறிப்பிடாமல் பொதுவாக வந்துள்ளது.
3 . சில செய்திகள் பெண்கள் வாசனை திரவியம் பூசிக்கொண்டு பள்ளிவாசலுக்கு சென்றால் வீட்டுக்கு வந்து கட்டாயம் குளிக்க வேண்டும் என்று வந்துள்ளது.
இவற்றில் முதல் கருத்தில் வரும் செய்திகளே மிகப் பலமாக உள்ளன. காரணம் இரண்டாவது கருத்தில் வரும் செய்திகளை ராவீ-41097-இப்னு அஜ்லான், ராவீ-25382-இப்னு லஹீஆ, ராவீ-11282-ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் போன்றோர் மட்டுமே அறிவித்துள்ளனர். இம்மூவரும் சிறிது நினைவாற்றல் சரியில்லாதவர்கள் என்றும், விமர்சிக்கப்பட்டவர்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
…
பார்க்க: அஹ்மத்-8035, முஸ்லிம்-760, அபூதாவூத்-4175, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-9363, நஸாயீ-5128, 5263, குப்ரா பைஹகீ-5374, …
2 . ஸைனப் பின்த் முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-758.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-5376,
சமீப விமர்சனங்கள்