பாடம்: 8
பாங்கு (எனும் தொழுகை அறிவிப்பு) முடிந்த பின் ஓதவேண்டிய பிரார்த்தனை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தொழுகை அறிவிப்பைக் கேட்(டு முடிக்)கும்போது, “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா.
(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) உயர் பதவியையும் தனிச் சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உன்னத இடத்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)” என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.
இதை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம்: 10
(புகாரி: 614)بَابُ الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ
Bukhari-Tamil-614.
Bukhari-TamilMisc-614.
Bukhari-Shamila-614.
Bukhari-Alamiah-579.
Bukhari-JawamiulKalim-582.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மத் பின் முன்கதிர் —> ஜாபிர் (ரலி)
பார்க்க: அஹ்மத்- 14817, புகாரி-614, 4719, இப்னு மாஜா-722, அபூதாவூத்-529, திர்மிதீ-211, குப்ரா நஸாயீ-, நஸாயீ-680, …
- இப்னு லஹீஆ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)
பார்க்க: அஹ்மத்- 14619, அல்முஃஜமுல் அவ்ஸத்- 194, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . பாங்குடன் தொடர்புடைய துஆக்கள்.
பார்க்க: முஸ்லிம்-628,
சமீப விமர்சனங்கள்