தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4320

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்பாத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரஹ்) ஆகிய சகோதரர்களிடம் (ஹிஜ்ரீ) 144 ஆம் ஆண்டில் செவியுற்றார்.

Book : 38

(முஸ்லிம்: 4320)

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ وَهُوَ الْمُلَقَّبُ بِسَبَلَانَ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، وَأَخِيهِ عَبْدِ اللهِ، سَمِعَهُ مِنْهُمَا سَنَةَ أَرْبَعٍ وَأَرْبَعِينَ وَمِائَةٍ، يُحَدِّثَانِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّ أَحَبَّ أَسْمَائِكُمْ إِلَى اللهِ عَبْدُ اللهِ وَعَبْدُ الرَّحْمَنِ»


Muslim-Tamil-4320.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2132.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3982.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து ராவி அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் அவர்களும், ராவீ-27460-உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் அவர்களும் அறிவிக்கின்றனர்.
  • இதில் அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் பலவீனமானவர் ஆவார். உபைதுல்லாஹ் பலமானவர் என்பதால் இது சரியான செய்தியாகும்.

இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-4774 , 6122 , தாரிமீ-2737 , முஸ்லிம்-4320 , இப்னு மாஜா-3728 , அபூதாவூத்-4949 , திர்மிதீ-2833 , 2834 , ஹாகிம்-7719 , 7720 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.