தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-759

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 96

லுஹ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும். 

 அபூகதாதா (ரலி) அறிவித்தார்:

லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

சில சயமங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமாறும் ஓதுவார்கள்.

அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள்.

ஸுபுஹ் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாம் ரக்அத்தில் குறைந்த நேரம் ஓதுவார்கள்.

அத்தியாயம்: 10

(புகாரி: 759)

بَابُ القِرَاءَةِ فِي الظُّهْرِ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ بِفَاتِحَةِ الكِتَابِ، وَسُورَتَيْنِ يُطَوِّلُ فِي الأُولَى، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ وَيُسْمِعُ الآيَةَ أَحْيَانًا، وَكَانَ يَقْرَأُ فِي العَصْرِ بِفَاتِحَةِ الكِتَابِ وَسُورَتَيْنِ، وَكَانَ يُطَوِّلُ فِي الأُولَى، وَكَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الصُّبْحِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ»


Bukhari-Tamil-759.
Bukhari-TamilMisc-759.
Bukhari-Shamila-759.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன்

3 . ஷைபான் பின் அப்துர்ரஹ்மான்

4 . யஹ்யா பின் அபூகஸீர்

5 . அப்துல்லாஹ் பின் அபூகதாதா

6 . அபூகதாதா (ரலி)


1 . இந்தக் கருத்தில் அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் அபூகஸீர் —> அப்துல்லாஹ் பின் அபூகதாதா —> அபூகதாதா (ரலி)

பார்க்க: …அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-759, 762, 776, 778, 779, முஸ்லிம்-771, 772, இப்னு மாஜா-, அபூதாவூத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


  • யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> அபூகதாதா (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-771, இப்னு மாஜா-, அபூதாவூத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …



இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.