பாடம்: 109
(சப்தமின்றித் தொழும் தொழுகையில்) இமாம் ஒரு சில வசனங்களை மற்றவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதினால் (செல்லுமா?)
அபூகதாதா (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையிலும் அஸர்த் தொழுகையிலும் ஸுரத்துல் ஃபாத்திஹாவுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தனர். சில நேரங்களில் (சில வசனங்களை) எங்களுக்குக் கேட்கும் படி ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதலாவது ரக்அத்தை நீளமாக்குவார்கள்.
அத்தியாயம்: 10
(புகாரி: 778)بَابُ إِذَا أَسْمَعَ الإِمَامُ الآيَةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ بِأُمِّ الكِتَابِ وَسُورَةٍ مَعَهَا فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ العَصْرِ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا وَكَانَ يُطِيلُ فِي الرَّكْعَةِ الأُولَى»
Bukhari-Tamil-778.
Bukhari-TamilMisc-778.
Bukhari-Shamila-778.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-739.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முஹம்மத் பின் யூஸுஃப்-ஃபர்யாபீ
3 . அவ்ஸாஈ இமாம்-அப்துர்ரஹ்மான் பின் அம்ர்
4 . யஹ்யா பின் ஸாலிஹ்-அத்தாயீ
5 . அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்-அல்அன்ஸாரீ
6 . ஹாரிஸ் பின் ரபீஃ (ரலி)-அஸ்ஸலமீ
மேலும் பார்க்க: புகாரி-759.
சமீப விமர்சனங்கள்