அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:
சுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ பிக்க வளஅத்து ஜன்பீ, வ பிக்க அர்ஃபஉஹு, இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா. வ இன் அர்சல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பி மா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: இறைவா! நீ (அனைத்துக் குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக! அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (“ஸுப்ஹானகல்லாஹும்ம! ரப்பீ!” என்பதற்குப் பகரமாக) பிஸ்மிக ரப்பீ வளஃது ஜன்பீ (என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)” என்றும், (“ஃப இன் அம்சக்த்த நஃப்ஸீ ஃபஃக்ஃபிர் லஹா” என்பதற்குப் பகரமாக) “ஃப இன் அஹ்யய்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா” என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக!)
அத்தியாயம்: 48
(முஸ்லிம்: 5257)وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ، فَلْيَأْخُذْ دَاخِلَةَ إِزَارِهِ، فَلْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ، وَلْيُسَمِّ اللهَ، فَإِنَّهُ لَا يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يَضْطَجِعَ، فَلْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ، وَلْيَقُلْ: سُبْحَانَكَ اللهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي، فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
– وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ: ” ثُمَّ لْيَقُلْ: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، فَإِنْ أَحْيَيْتَ نَفْسِي، فَارْحَمْهَا
Muslim-Tamil-5257.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2714.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4895.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
تهذيب التهذيب (1/ 190):
قال أبو داود: وحدثنا محمود حدثنا مروان، وذكر أبا ضمرة فقال: كانت فيه غفلة الشاميين، ووثقه، ولكنه كان يعرض كتبه على الناس.
மர்வான் அவர்கள் அபூளம்ராவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இவரிடம் ஷாம் தேசத்தவர்களிடம் இருக்கக்கூடிய கவனக்குறைவு இருந்தது. இருப்பினும் இவர் பலமானவர் தான். ஆனால் இவர் தனது (ஹதீஸ்) புத்தகங்களை மற்ற மக்களிடம் காட்டி (சரிபார்த்து) வரக்கூடியவராக இருந்தார்.
تهذيب التهذيب (1/ 190):
وقال الآجري عن أبي داود عن أحمد بن صالح قال ذكر أبو ضمرة عند مالك فقال: لم أر عند المحدثين غيره، ولكنه أحمق يدفع كتبه إلى هؤلاء العراقيين.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ் அவர்கள் கூறுகிறார்: மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்களிடம் அபூளம்ராவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அதற்கு அவர்கள்: ஹதீஸ் கலை அறிஞர்களில் இவரைத் தவிர வேறு யாரையும் நான் (சிறந்தவராக) காணவில்லை. எனினும், அவர் ஒரு முட்டாள்; அவர் தனது (ஹதீஸ்) புத்தகங்களை இந்த ஈராக்கியர்களிடம் கொடுத்துவிடுகிறார்” என்று கூறினார்கள்.
(அக்காலத்தில் ஹிஜாஸ் (மதீனா) அறிஞர்களுக்கும், ஈராக் அறிஞர்களுக்கும் இடையில் ஹதீஸ்களை அறிவிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அபூளம்ரா தனது நம்பகமான குறிப்பேடுகளை அந்நியர்களிடம் (அதாவது ஈராக்கியர்களிடம்) கொடுத்து அவர்கள் அதில் மாற்றங்கள் செய்யவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ வாய்ப்பளித்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் தான் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.)
மேலும் பார்க்க: புகாரி-7393.
சமீப விமர்சனங்கள்