அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ கஃபானா வ ஆவானா. ஃப கம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய” என்று கூறுவார்கள்.
(பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால்,போதுமாக்கிவைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.)
அத்தியாயம்: 48
(முஸ்லிம்: 5258)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ»
Muslim-Tamil-5258.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2715.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4896.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-12552, 12712, 13653, முஸ்லிம்-5258, அபூதாவூத்-5053, திர்மிதீ-3396,
.. ஹாகிம்-2001,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-5458,
சமீப விமர்சனங்கள்