தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5464

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 13

நரக நெருப்பின் கடுமையான வெப்பமும், அதன் ஆழத்தின் அளவும், அது நரகவாசிகளைத் தீண்டும் அளவும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 51

(முஸ்லிம்: 5464)

12 – بَابٌ فِي شِدَّةِ حَرِّ نَارِ جَهَنَّمَ وَبُعْدِ قَعْرِهَا وَمَا تَأْخُذُ مِنَ الْمُعَذَّبِينَ

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْعَلَاءِ بْنِ خَالِدٍ الْكَاهِلِيِّ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»


Muslim-Tamil-5464.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2842.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5080.




(குறிப்பு: நபித்தோழரின் சொல், செயல் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளுக்கும் நபித்தோழரின் செயல் என்றே நாம் ஹதீஸின் தரத்தில் குறிப்பிடுகிறோம்)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28749-அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ அல்அஸதீ அல்கூஃபீ என்பவர் பற்றி (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான) அபூஸலமா-மூஸா பின் இஸ்மாயீல் அத்தபூதகீ அவர்கள் இவரிடம் நான்கு ஹதீஸ்களே இருந்தன. இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறினார் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் கூறியதாக சில ஹதீஸ் சாஃப்ட்வேர்களில் உள்ளது. ஆனால் இந்த விமர்சனம் தாரீகுல் கபீர்-3171 இல் இடம்பெறும், அதாஉ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்அலாஉ பின் காலித் அல்குரஷீ  அல்பஸரீ அல்வாஸிதீ என்பவரைப் பற்றியதாகும். தாரீகுல் கபீர்-3169 இல் இடம்பெறும் அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ என்பவரைப் பற்றி அல்ல.

(நூல்: தாரீகுல் கபீர்-3169, 3171, பாகம்: 6, பக்கம்: 516, 517)

(மேற்கண்ட இருவரையும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் ஒருவராக கணக்கிட்டுள்ளார். ஆனால் உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இருவராக கணக்கிட்டுள்ளனர் என்ற தகவலை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் அல்அலாஉ பின் காலித் அல்குரஷீ அல்பஸரீ என்பவரைப் பற்றிய குறிப்பில் கூறியுள்ளார். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப்-3/342).

இப்னு அதீயைப் போன்றே இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்களும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று முடிவு செய்துள்ளார். இது தவறாகும். அலாஉ பின் காலித் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர் என்பதாலே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலே இருவரை கூறியுள்ளோம். மூன்றாவது நபர் அல்அலாஉ பின் காலித் பின் வர்தான் அல்ஹனஃபீ அல்பஸரீ ஆவார். அறிவிப்பாளர்கள் பற்றிய சில நூல்களில் இந்த மூவரையும் கலந்து தவறான தகவல் கூறப்பட்டுள்ளது)

  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள், இவரிடம் நான்கைந்து ஹதீஸ்களே இருந்தன. இவரிடமிருந்து வேண்டுமென்றே நான் ஹதீஸை கேட்பதை விட்டுவிட்டேன். பின்பு ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களிடமிருந்து இவர் வழியாக வரும் ஹதீஸ்களை எழுதிக்கொண்டேன் என்று கூறினார் என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரை யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இப்னுமயீன் போன்றோர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள், இவரைப் பற்றி கூறும்போது மேற்கண்ட செய்தியை குறிப்பிட்டு (இந்த செய்தி நபியின் கூற்றாகவும், நபித்தோழரின் கூற்றாகவும் வந்திருப்பதால்) இவர் குளறுபடியாக அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். (ஆனால் இதை வைத்து ஒருவரை குளறுபடியாக அறிவிப்பவர் என்று முடிவு செய்ய முடியாது)

1 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் ஆரம்பத்தில் இவரிடமிருந்து ஹதீஸை அறிவிக்காவிட்டாலும் பிறகு தன் முடிவை மாற்றியுள்ளார். (இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களின் தகவல் அல்அலாஉ பின் காலித் அல்குரஷீ என்பவருக்கே பொருந்தும்)

2 . இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவரை பலமானவர் என்று கூறியதாக அவரின் மாணவரான அபூபக்ர் பின் அபூகைஸமா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

3 . இந்த தகவலை இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்களும் கூறியுள்ளார்.

4 . ஸுப்யான் ஸவ்ரீ அவர்கள் இவர் பலமானவர் என்று கூறியதாக யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அல்ஃபஸவீ அறிவித்துள்ளார்.

5 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்களும் இவரை ஆதாரமாக ஏற்றுள்ளார்.

எனவே இவரை முக்கியமான அறிஞர்களில் சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர் என்பதால் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியிருப்பது தவறு என்று தெரிகிறது. இமாம் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் இவரை ஸதூக்-நம்பகமானவர்-சுமாரானவர் என்றே கூறியுள்ளனர்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1957, 6/354, 355, அல்மஃரிஃபது வத்தாரீக்-3/114, அள்ளுஅஃபாஉல் கபீர்-1373, 3/344, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/377,  தஹ்தீபுல் கமால்-22/491, தாரீகுல் இஸ்லாம்-3/705, அல்காஷிஃப்-3/594, தஹ்தீபுத் தஹ்தீப்-3/342, தக்ரீபுத் தஹ்தீப்-1/760)

  • இந்த செய்தி நபியின் கூற்றாகவும், நபித்தோழரின் கூற்றாகவும் வந்துள்ளது.

1 . அலாஉ பின் காலிதிடமிருந்து அறிவிக்கும் ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்கள் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார்.

2 . அலாஉ பின் காலிதிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ, மர்வான் பின் முஆவியாவும், ஸிர்ரு பின் ஹுபைஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஆஸிம் பின் பஹ்தலாவும் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

3 . அபூவாயில்-ஷகீக் அவர்களின் சொல்லாகவும் ஆஸிம் பின் பஹ்தலா அறிவித்துள்ளார்.

  • இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களை கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், தனது தந்தை ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்களிடமிருந்து அலாஉ பின் காலித் வழியாக அறிவிக்கும் உமர் பின் ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் இந்த செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். அலாஉ பின் காலிதிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர். இந்த செய்தியை உமர் பின் ஹஃப்ஸ் வழியாக முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் அவர்கள் (நபியின் கூற்றாக) தனது ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்திருந்தாலும் நபித்தோழரின் கூற்றாக வந்திருக்கும் அறிவிப்பாளர்தொடருக்கே நான் முன்னுரிமை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-732, 5/86)

1 . இமாம் நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் விமர்சனத்தை குறிப்பிட்டுவிட்டு ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் பலமானவர்; ஹாஃபிள்; இமாம் ஆவார். பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற ஹதீஸ்கலை விதிப்படி நபியின் கூற்றாக அறிவித்தல் என்ற கூடுதல் தகவலை ஏற்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் வழமை என்று கூறியுள்ளார். இந்த அடிப்படையில் சில அறிஞர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.

(பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற ஹதீஸ்கலை விதி எல்லா இடத்திலும் ஏற்கப்படும் என்பதல்ல. ஒரு பலமானவர் கூறியதை விட அதே தரத்தில் உள்ள பலமான ஒருவர் கூடுதலாக அறிவித்தால் ஏற்கலாம் என்று கூறுவர். இவ்வாறே எண்ணிக்கையிலும், நினைவாற்றலில் இரு தரப்பும் சமமாக இருக்கும் போது பலமானவர்களின் கூடுதல் தகவல் ஏற்கப்படும்.

ஒரு பலமானவர் தன்னை விட மிகப் பலமானவரை விட அல்லது அதிகமான மிகப் பலமானவர்களை விட கூடுதலாக அறிவித்தால் அது ஏற்கப்படாது. ஷாத் என்று ஆகிவிடும்.

இந்த ஹதீஸ்கலை விதியைப் பற்றி அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார். பார்க்க: متى تُقبل زيادة الثقة ومتى ترد ؟ .

இதனடிப்படையில் ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்கள் பலமானவர் என்ற தரத்தில் உள்ளவர் ஆவார். ஆனால் ஸுஃப்யான் ஸவ்ரீ, மர்வான் பின் முஆவியா ஆகியோர் பலமானவர்கள்-ஹாஃபிள்கள் என்ற தரத்தில் உள்ளவர்கள் ஆவர் என்பதால் இவர்கள் மிகப் பலமானவர்கள்; மேலும் சுமாரான தரத்தில் உள்ளவரான ஆஸிம் பின் பஹ்தலாவும் இவர்களைப் போன்று அறிவித்துள்ளார். இமாம் நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள் கூறுவது போன்று ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்களையும் மிகப் பலமானவர் என்று முடிவு செய்தாலும் எதிர்த்தரப்பில் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஹஃப்ஸ் அவர்களின் கூடுதல் தகவல் ஏற்கப்படாது.)

2 . சிலர், இந்த செய்தியை நபித்தோழரின் கூற்றுதான் என்று ஏற்றுக்கொண்டாலும் இதுபோன்ற தகவலை நபித்தோழர் சுயமாக கூறியிருக்கமாட்டார்; நபி (ஸல்) அவர்களிடமிருந்தே கேட்டு கூறியிருப்பார் என்பதால் இதுவும் மர்ஃபூவான ஹதீஸ் போன்றதே என்று கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் —> அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ —> அபூவாயில்-ஷகீக் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: முஸ்லிம்-5464 , திர்மிதீ-2573 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-10428 , ஹாகிம்-8758 ,

  • மர்வான் பின் முஆவியா, ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ —> அபூவாயில்-ஷகீக் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34117 ,  திர்மிதீ-2573 ,

  • ஆஸிம் பின் பஹ்தலா —> அபூவாயில்-ஷகீக்.

பார்க்க: தஃப்ஸீருத் தப்ரீ-24/389.

تفسير الطبري = جامع البيان ط هجر (24/ 389)

حَدَّثَنَا ابْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ وَاضِحٍ، قَالَ: ثنا الْحُسَيْنُ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي وَائِلٍ: {وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ} [الفجر: 23] قَالَ: يُجَاءُ بِهَا يَوْمَ الْقِيَامَةِ تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ

  • ஆஸிம் பின் பஹ்தலா —> ஸிர்ரு பின் ஹுபைஷ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34166 ,

2 comments on Muslim-5464

  1. இமாம் நவவி சொன்னது போன்று

    ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் பலமானவர்; ஹாஃபிள்; இமாம் ஆவார். பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற ஹதீஸ்கலை விதிப்படி நபியின் கூற்றாக அறிவித்தல் என்ற கூடுதல் தகவலை ஏற்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் வழமை என்று கூறியுள்ளார்

    இதுபோன்ற தகவலை நபித்தோழர் சுயமாக கூறியிருக்கமாட்டார்; நபி (ஸல்) அவர்களிடமிருந்தே கேட்டு கூறியிருப்பார் என்பதால் இதுவும் மர்ஃபூவான ஹதீஸ் போன்றதே என்று கூறியுள்ளனர்.

    அனைத்தையும் வைத்து பார்க்கும் போது நபியின் கூற்றுதான் சரி என்பதை புரிந்து கொள்ளலாம்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற ஹதீஸ்கலை விதி எல்லா இடத்திலும் ஏற்கப்படும் என்பதல்ல. ஒரு பலமானவர் கூறியதை விட அதே தரத்தில் உள்ள பலமான ஒருவர் கூடுதலாக அறிவித்தால் ஏற்கலாம் என்று கூறுவர். இவ்வாறே எண்ணிக்கையிலும், நினைவாற்றலில் இரு தரப்பும் சமமாக இருக்கும் போது பலமானவர்களின் கூடுதல் தகவல் ஏற்கப்படும்.

      ஒரு பலமானவர் தன்னை விட மிகப் பலமானவரை விட அல்லது அதிகமான மிகப் பலமானவர்களை விட கூடுதலாக அறிவித்தால் அது ஏற்கப்படாது. ஷாத் என்று ஆகிவிடும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.