தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-443

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நல்லதைக் கற்கவேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஒருவர், காலையில் அல்லது மாலையில் பள்ளிவாசலுக்கு வந்து, பிறகு தன் வீட்டுக்குச் சென்றால், அவர் (இறைவழியில் போரிட்டு வெற்றி பெற்று) போர்ச்செல்வங்களுடன் திரும்பி வரும் போராளியைப் போன்றவர் ஆவார் என்று அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸுமைய் (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 443)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ كَانَ يَقُولُ

«مَنْ غَدَا أَوْ رَاحَ إِلَى الْمَسْجِدِ، لَا يُرِيدُ غَيْرَهُ، لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيُعَلِّمَهُ، ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، رَجَعَ غَانِمًا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-443.
Muwatta-Malik-Alamiah-346.
Muwatta-Malik-JawamiulKalim-382.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . யஹ்யா அல்லைஸீ

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

3 . ஸுமைய் (அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் அடிமை)

4 . அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான்



இது மக்தூஃவான செய்தி.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.