தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-14

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

மலம், ஜலம் கழிக்கும் போது எப்போது ஆடையை விலக்குவது?

14. நபி (ஸல்) அவர்கள் தன் இயற்கைக் கடனை நிறைவேற்ற விரும்பினால் (தம் மறைவான உறுப்புகளை யாரும் பார்த்துவிடாதபடி) தரைக்கு மிக நெருக்கமான பின் தமது ஆடையை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அவர்கள், அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (அஃமஷ் அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால்) இது பலவீனமானதாகும்.

(அபூதாவூத் இமாம் அவர்களின் எழுத்தாளரான) அபூஈஸா அர்ரம்லீ (இஸ்ஹாக் பின் மூஸா பின் ஸஃத்) கூறுகிறார்:

அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை எங்களுக்கு, அஹ்மத் பின் வலீத் அவர்கள், அம்ர் பின் அவ்ன் —> அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் —> அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்று அறிவித்தார்.

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.


16 – بَابُ كَيْفَ التَّكَشُّفُ عِنْدَ الْحَاجَةِ

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ رَجُلٍ، عَنِ ابْنِ عُمَرَ:

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ حَاجَةً لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ – وَهُوَ ضَعِيفٌ –

قَالَ أَبُوعِيسَى الرَّمْلِيُّ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا عَبْدُ السَّلَامِ بِهِ


Abu-Dawood-Tamil-13.
Abu-Dawood-TamilMisc-13.
Abu-Dawood-Shamila-14.
Abu-Dawood-Alamiah-13.
Abu-Dawood-JawamiulKalim-13.



…(குறிப்பு: இமாம் ஸுயூத்தி பிறப்பு ஹிஜ்ரி 849
இறப்பு ஹிஜ்ரி 911
வயது: 62
அவர்கள் தெரிவிக்கின்றார்கள் இது (அப்துஸ்ஸலாம்) பலவீனமானது என்று இமாம் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் குறிப்பிட்டிருப்பது அப்துஸ்ஸலாம் அவர்களை பலவீனமானவர் என்பதை தெரிவிப்பதற்காக அல்ல. ஏனெனில், இவர் சஹீஹைன் (புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியவைகளின்) அறிவிப்பாளர்களின் வரிசையில் இடம் பெறும் நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர் ஆவார். எனினும், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று தெரிவிப்பதே இமாம் அவர்களின் நோக்கமாகும். ஏனெனில் அஃமஷ் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செயியுறவில்லை. இதனால் இவர் (இதை) முர்ஸலாக அறிவிக்கின்றார். இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
அவர்கள் வழியாக அறிவிக்கும் அந்த ஒருவர் யாரென தெரியாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.) அதாவது அனஸ் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
இருவர் வழியாக அறிவிக்கும் இரண்டுமே பலவீனமானதாகும்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.