பாடம் : 48
உளூச் செய்யத் துவங்கும் போது (பிஸ்மி) அல்லாஹ்வின் பெயர் கூறுதல்.
யார் உளூவின் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறவில்லையோ அவருக்கு உலூ இல்லை, யாருக்கு உலூ இல்லையோ அவருக்கு தொழுகை இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: அஹ்மது, இப்னுமாஜா, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ, திர்மிதீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறும் யஃகூப்பின் சலமா தனது தந்தையிடம் செவியுற்றதில்லை. அவரது தந்தை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செவியுற்றதில்லை. எனவே இது தொடர்பு துண்டிக்கப்பட்ட செய்தியாகிறது.)
மேலும் இந்த கருத்தில் பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய ஒரு ஹதீஸைக்கூட நான் அறியவில்லை என்று இமாம் அஹ்மது பின் ஹன்பல் குறிப்பிட்டுள்ளனர். எனினும் பொதுவாக எல்லாக் காரியங்களையும் பிஸ்மில்லா கூறியே ஆரம்பிக்க வேண்டும் என்ற ஹதீஸின் அடிப்படையில் உலூவுக்கும் பிஸ்மில்லா கூற வேண்டும் என்று கருத இடம் உள்ளது. மேலும் நபித்தோழர்கள் சிலர் உலூச் செய்வதற்காக தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்த தண்ணீரில் தமது கையை வைத்தார்கள். அல்லாஹ்வின் பெயரால் உலூச் செய்யுங்கள் என்றும் கூறினார்கள். அந்த நபித்தோழர்களில் கடைசியானவர் உலூச் செய்யும் வரை அவர்களின் விரல்களில் இருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என அனஸ் (ரலி) அறிவிக்கும் நஸயீயின் 78வது ஹதீஸ் படி பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்.)
(அபூதாவூத்: 101)48- بَابٌ فِي التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ»
AbuDawood-Tamil-101.
AbuDawood-Shamila-101.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்