தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-101

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 48

உளூச் செய்யத் துவங்கும் போது (பிஸ்மி) அல்லாஹ்வின் பெயர் கூறுதல்.

யார் உளூவின் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறவில்லையோ அவருக்கு உலூ ‎இல்லை, யாருக்கு உலூ இல்லையோ அவருக்கு தொழுகை இல்லை என்று ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: அஹ்மது, இப்னுமாஜா, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ, திர்மிதீ ஆகிய நூல்களிலும் ‎இது இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறும் யஃகூப்பின் சலமா ‎தனது தந்தையிடம் செவியுற்றதில்லை. அவரது தந்தை அபூஹுரைரா (ரலி) ‎அவர்களிடம் செவியுற்றதில்லை. எனவே இது தொடர்பு துண்டிக்கப்பட்ட ‎செய்தியாகிறது.)‎

மேலும் இந்த கருத்தில் பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய ஒரு ‎ஹதீஸைக்கூட நான் அறியவில்லை என்று இமாம் அஹ்மது பின் ஹன்பல் ‎குறிப்பிட்டுள்ளனர். எனினும் பொதுவாக எல்லாக் காரியங்களையும் பிஸ்மில்லா ‎கூறியே ஆரம்பிக்க வேண்டும் என்ற ஹதீஸின் அடிப்படையில் உலூவுக்கும் ‎பிஸ்மில்லா கூற வேண்டும் என்று கருத இடம் உள்ளது. மேலும் நபித்தோழர்கள் ‎சிலர் உலூச் செய்வதற்காக தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‎உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள். ‎‎(சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்த தண்ணீரில் தமது கையை ‎வைத்தார்கள். அல்லாஹ்வின் பெயரால் உலூச் செய்யுங்கள் என்றும் கூறினார்கள். ‎அந்த நபித்தோழர்களில் கடைசியானவர் உலூச் செய்யும் வரை அவர்களின் ‎விரல்களில் இருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என ‎அனஸ் (ரலி) அறிவிக்கும் நஸயீயின் 78வது ஹதீஸ் படி பிஸ்மில்லாஹ் கூற ‎வேண்டும்.)‎

(அபூதாவூத்: 101)

48- بَابٌ فِي التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ»


AbuDawood-Tamil-101.
AbuDawood-Shamila-101.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.