தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-251

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 100

(பெருந்தொடக்கை நீக்குவதற்காக) குளிக்கும் பெண் தன் பின்னல்முடியை அவிழ்க்க வேண்டுமா?

முஸ்லிம்களில் ஒரு பெண்மணி, (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நான் தலையை இறுக்கமாக பின்னிக் கொள்பவளாக இருக்கிறேன். கடமையான குளிப்பின் போது நான் (அதனை) அவிழ்த்து விட வேண்டுமா? என்று கேட்டார்.

(இந்தக் கேள்வியை உம்மு ஸலமா (ரலி) அவர்களே, நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக ஸுஹைர் அவர்களின் அறிவிப்பில் உள்ளது)

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ மூன்று முறை இரு உள்ளங்கை நிரம்ப தண்ணீரை எடுத்து தலை மீது  ஊற்று! இவ்வாறு ஊற்றுவதே உனக்குப் போதுமானதாகும். பிறகு, உனது உடலில் மற்ற பகுதியில் நீரை ஊற்றிக் கொள்! நீ அப்போது தூய்மையாகி விடுவாய்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(அபூதாவூத்: 251)

100 – بَابٌ فِي الْمَرْأَةِ هَلْ تَنْقُضُ شَعْرَهَا عِنْدَ الْغُسْلِ

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ السَّرْحِ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ

أَنَّ امْرَأَةً مِنَ الْمُسْلِمِينَ – وَقَالَ زُهَيْرٌ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ – أَشُدُّ ضُفُرَ رَأْسِي أَفَأَنْقُضُهُ لِلْجَنَابَةِ؟ قَالَ: «إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْفِنِي عَلَيْهِ ثَلَاثًا» – وَقَالَ زُهَيْرٌ: «تُحْثِي عَلَيْهِ ثَلَاثَ حَثَيَات مِنْ مَاءٍ» ثُمَّ تُفِيضِي عَلَى سَائِرِ جَسَدِكِ، فَإِذَا أَنْتِ قَدْ طَهُرْتِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-251.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




  • இந்தச் செய்தியை ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஹைர் பின் ஹர்ப் அவர்களே இப்னுஸ் ஸர்ஹ் அவர்களை விட மிகப்பலமானவர் என்பதால் அவரின் அறிவிப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-549 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.