தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-251

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 100

(பெருந்தொடக்கை நீக்குவதற்காக) குளிக்கும் பெண் தன் பின்னல்முடியை அவிழ்க்க வேண்டுமா?

251. முஸ்லிம்களில் ஒரு பெண்மணி, (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நான் தலையை இறுக்கமாக பின்னிக் கொள்பவளாக இருக்கிறேன். கடமையான குளிப்பின் போது நான் (அதனை) அவிழ்த்து விட வேண்டுமா? என்று கேட்டார்.

(இந்தக் கேள்வியை உம்மு ஸலமா (ரலி) அவர்களே, நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக ஸுஹைர் அவர்களின் அறிவிப்பில் உள்ளது)

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ மூன்று முறை இரு உள்ளங்கை நிரம்ப தண்ணீரை எடுத்து தலை மீது  ஊற்று! இவ்வாறு ஊற்றுவதே உனக்குப் போதுமானதாகும். பிறகு, உனது உடலில் மற்ற பகுதியில் நீரை ஊற்றிக் கொள்! நீ அப்போது தூய்மையாகி விடுவாய்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

…

உம்மு ஸலமா (ரலி)

உம்மு ஸலமா-அல்மக்ஸூமியா (ரலி) – Umm Salamah

இறப்பு: ஹிஜ்ரி 62, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஹிந்த் பின்த் அபீ உமைய்யா

தந்தை பெயர்: அபூ உமைய்யா பின் அல்முகீரா பின் அப்துல்லாஹ் அல்மக்ஸூமீ

வம்சம்: மக்ஸூமீ, குரைஷீ

புனைப்பெயர்: உம்முல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 25, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 62, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

உம்மு ஸலமா ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியும், முஃமின்களின் அன்னைமார்களில் ஒருவருமாவார். அவர்கள் அபூ ஸலமா ரலி அவர்களின் மனைவியாக இருந்தபோது இருமுறை அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அபூ ஸலமா ரலி அவர்கள் ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு மரணமடைந்த பிறகு, நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா ரலி அவர்களை மணமுடித்தார்கள்.

அவர்கள் சிறந்த மார்க்க அறிஞராகவும், அக்காலத்தின் புத்திசாலித்தனமான பெண்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அபூ ஸலமா பின் அப்துல் அஸத், ஃபாத்திமா பின்த் ரஸூலுல்லாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸைனப் பின்த் அபீ ஸலமா, உமர் பின் அபீ ஸலமா, உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா அல்கல்பீ, ஸுலைமான் பின் யஸார், உர்வா பின் அஸ்ஸுபைர், ஸயீத் பின் அல்முஸய்யப், ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, ஆமிர் அஷ்ஷஅபீ, அப்துல்லாஹ் பின் ராஃபிஃ, குரைப் மவ்லா இப்னு அப்பாஸ், முஜாஹித் பின் ஜப்ர் அல்மக்கீ, நாஃபிஃ மவ்லா இப்னு உமர்

வேறு பெயர்கள்: ஹிந்த் பின்த் அபீ உமைய்யா


ஆதாரம்: muslimscholars.info (56) · Should verify


100 – بَابٌ فِي الْمَرْأَةِ هَلْ تَنْقُضُ شَعْرَهَا عِنْدَ الْغُسْلِ

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ السَّرْحِ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ

أَنَّ امْرَأَةً مِنَ الْمُسْلِمِينَ – وَقَالَ زُهَيْرٌ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ – أَشُدُّ ضُفُرَ رَأْسِي أَفَأَنْقُضُهُ لِلْجَنَابَةِ؟ قَالَ: «إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْفِنِي عَلَيْهِ ثَلَاثًا» – وَقَالَ زُهَيْرٌ: «تُحْثِي عَلَيْهِ ثَلَاثَ حَثَيَات مِنْ مَاءٍ» ثُمَّ تُفِيضِي عَلَى سَائِرِ جَسَدِكِ، فَإِذَا أَنْتِ قَدْ طَهُرْتِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-251.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.



  • இந்தச் செய்தியை ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஹைர் பின் ஹர்ப் அவர்களே இப்னுஸ் ஸர்ஹ் அவர்களை விட மிகப்பலமானவர் என்பதால் அவரின் அறிவிப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-549 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.