பாடம்: 176
மனாராவின் (உயரமான இடத்தின்) மேல் நின்று பாங்கு சொல்லுதல்.
பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:
பள்ளியை சுற்றி உள்ள வீடுகளில் எனது வீடு மிக உயரமாக அமைந்திருந்தது. பிலால் (ரலி) அவர்கள் அதில் ஏறி பஜ்ருக்கான பாங்கு சொல்வார். ஸஹர் நேரத்தில் வந்து, அமர்ந்து பஜ்ர் நேரத்தை கவனித்துக் கொண்டிருப்பார். பஜ்ர் நேரத்தை அவர் பார்த்ததும் அவர் உடல் சிலிர்த்து எழுந்து, “அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக்க வ அஸ்தயீனுக்க அலா குரைஷின் அன் யுகீமூ தீனக்க” (யாஅல்லாஹ்! உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உன்னுடைய மார்க்கத்தை நிலை நாட்ட வேண்டுமென உன்னிடமே உதவி தேடுகின்றேன்) என்று சொல்வார். பிறகு பாங்கு சொல்வார். ஒரு இரவு கூட இந்த வார்த்தைகளை (சொல்லாமல்) விட்டதாக நான் காணவில்லை!
(அபூதாவூத்: 519)176- بَابُ الْأَذَانِ فَوْقَ الْمَنَارَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَيُّوبَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ امْرَأَةٍ مِنْ بَنِي النَّجَّارِ قَالَتْ
كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ فَيَأْتِي بِسَحَرٍ فَيَجْلِسُ عَلَى الْبَيْتِ يَنْظُرُ إِلَى الْفَجْرِ، فَإِذَا رَآهُ تَمَطَّى، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَحْمَدُكَ وَأَسْتَعِينُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيمُوا دِينَكَ» قَالَتْ: ثُمَّ يُؤَذِّنُ، قَالَتْ: وَاللَّهِ مَا عَلِمْتُهُ كَانَ تَرَكَهَا لَيْلَةً وَاحِدَةً تَعْنِي هَذِهِ الْكَلِمَاتِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-435.
Abu-Dawood-Shamila-519.
Abu-Dawood-Alamiah-435.
Abu-Dawood-JawamiulKalim-434.
பிலால் (ரலி) அவர்கள் மதீனாவில் ஆரம்பத்தில் பாங்கு கூறிய இடங்கள் பற்றிய செய்திகள்:
…
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் அய்யூப்-அல்வர்ராக்
3 . இப்ராஹீம் பின் ஸஃத்
4 . முஹம்மத் பின் இஸ்ஹாக்
5 . முஹம்மத் பின் ஜஅஃபர் பின் ஸுபைர்
6 . உர்வா பின் ஸுபைர்
7 . பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி
ஆய்வின் சுருக்கம்:
சில அறிஞர்கள் இதை ஹஸன் தர செய்தி என்று கூறியிருந்தாலும் வேறு சிலர் இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28356-உர்வா பின் ஸுபைர் அவர்கள், பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த இந்த பெண்மணியிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? இல்லையா? என்ற தகவல் இல்லை.
உர்வா பின் ஸுபைர் அவர்கள் மூத்த நபித்தோழர்களிடமிருந்து அறிவிப்பவை முர்ஸலான செய்திகளாக உள்ளன. இந்தச் செய்தியில் கூறப்படும் பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த பெண் ஆரம்பக் காலத்தில் உள்ள மூத்த நபித்தோழர்களைப் போன்றவராக இருக்கலாம்…
விரிவான தகவல்:
இந்தச் செய்தியில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றில் சில மற்றவற்றை விட வலிமையானவை.
1 . இந்தச் செய்தியை இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மது பின் அய்யூப் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களிடமிருந்து இவர் அறிவித்த செய்திகளில் கவனக்குறைவு, தவறு உள்ளது.
மேலும் இவரை சிலர் பாராட்டியுள்ளனர். வேறு சிலர் விமர்சித்துள்ளனர்.
1 . இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார்.
2 . இவர் இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களிடமிருந்தும், இப்னு அய்யாஷ் அவர்களிடமிருந்தும் அறிவிக்கும் போர் குறித்த செய்திகள் முன்கரானவை என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் விடப்பட்டவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.
3 . இவரைப் பற்றி யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள், “இவர் ஹதீஸ் துறையில் ஈடுபட்ட அறிஞர்களில் ஒருவரல்ல. இவர் மற்றவர்களுக்கு ஹதீஸை எழுதித் தரக்கூடியவர் மட்டுமே” என்று கூறியுள்ளார்.
4 . அபூஅஹ்மத்-ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், இவர் ஹதீஸ்துறை அறிஞர்களின் பார்வையில் பலமானவரல்ல என்று கூறியுள்ளார்.
5 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், “இவர் ஸதூக் தரத்தில் உள்ளவர். இவரிடம் ஹதீஸை அறிவிப்பதில் கவனக் குறைவு இருந்தது. மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரின் செய்திகளை விமர்சித்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் விமர்சிக்கவில்லை என்று கூறியுள்ளார் என தனது தஹ்தீபில் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/70, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/285, தாரீகுபஃக்தாத்-6/62, தஹ்தீபுத் தஹ்தீப்-1/42, தக்ரீபுத் தஹ்தீப்-1/97)
இவரைப் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்றவர்கள் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியிருந்தாலும் வேறு சிலர் விமர்சித்துள்ளனர் என்பதால் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை ஆகும்.
2 . உர்வா பின் ஸுபைர் அவர்கள், பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த இந்த பெண்மணியிடம் ஹதீஸைக் கேட்கவில்லை.
இது போன்று வேறு சில குறைகள் கூறப்பட்டாலும் மேற்கண்ட இரண்டு காரணங்களே பலமாக உள்ளன.
இன்ஷா அல்லாஹ் மற்ற விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
1 . இந்தக் கருத்தில் பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஸீரது இப்னு ஹிஷாம்-1/509, அபூதாவூத்-519, குப்ரா பைஹகீ-1995,
- ஸீரது இப்னு ஹிஷாம்-1/509.
سيرة ابن هشام – ت السقا (1/ 509):
قَالَ ابْنُ إسْحَاقَ: وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ امْرَأَةٍ مِنْ بَنِي النَّجَّارِ، قَالَتْ: كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ، فَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ لِلْفَجْرِ كُلَّ غَدَاةٍ، فَيَأْتِي بِسَحَرٍ، فَيَجْلِسُ عَلَى الْبَيْتِ يَنْتَظِرُ الْفَجْرَ، فَإِذَا رَآهُ تَمَطَّى، ثُمَّ قَالَ: اللَّهمّ إنِّي أَحَمْدُكَ وَأَسْتَعِينُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيمُوا عَلَى دِينِكَ. قَالَتْ: وَاَللَّهِ مَا عَلِمْتُهُ كَانَ يَتْرُكُهَا لَيْلَةً وَاحِدَةً.
…
2 . நவ்வார் (ஸைத் பின் ஸாபித் அவர்களின் தாயார்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தபக்காதுல் குப்ரா-13021, …
3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: வஃபாஉல் வஃபா பி அக்பாரி தாரில் முஸ்தஃபா-2/101,
وفاء الوفاء بأخبار دار المصطفى (2/ 101)
وأسند يحيى من طريق عبد العزيز بن عمران عن قدامة العمري عن نافع عن ابن عمر، قال: كان بلال يؤذن على منارة في دارة حفصة ابنة عمر التي تلي المسجد، قال: وكان يرقى على أقتاب فيها، والأسطوان في البيت الذي كان بيد عبيد الله بن عمر الذي يقال له بيت عبد الله بن عمر، وقد كانت خارجة من مسجد رسول الله صلّى الله عليه وسلّم لم تكن فيه، وليست فيه اليوم،
والظاهر أنه تجوّز في تسمية الأسطوان منارة، وعبد العزيز بن عمران كان كثير الغلط؛ لأن كتبه احترقت؛ فكان يروي من حفظه، فتركوه، ثم الظاهر أن عمر وعثمان رضي الله عنهما لم يتخذا في المسجد منارة، وإلا لنقل.
பிலால் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு அடுத்துள்ள ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களின் வீட்டில் இருந்த ஒரு மனாராவில் ஏறி பாங்கு சொல்வார்கள். பிலால் (ரலி) அவர்கள், அந்த மனாராவில் இருந்த பலகைகளில் ஏறி (பாங்கு சொல்லும் இடத்திற்கு) செல்வார்கள். அந்த வீட்டுக்கு, உபைதுல்லாஹ் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்த, ‘அப்துல்லாஹ் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்அவர்களின் வீடு’ என்று சொல்லப்படும். அந்த வீட்டில் ஒரு தூண் இருந்தது. அது அப்போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு வெளியே இருந்தது; பள்ளிவாசலின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இன்று அது பள்ளிவாசலில் இல்லை.
இந்தச் செய்தியில் ஒரு தூணை மனாரா என்று குறிப்பிட்டது ஒரு வகை கற்பனையான பெயராகவே தெரிகிறது. இதில் இடம்பெறும் அப்துல்அஸீஸ் பின் இம்ரான் என்பவர் அதிகம் தவறிழைப்பவர் ஆவார். ஏனெனில் அவருடைய நூல்கள் எரிந்துவிட்டதால், அவர் மனனத்திலிருந்து அறிவிப்பவராக இருந்தார். இதனால் மக்கள் அவரை புறக்கணித்துவிட்டார்கள்.
மேலும் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் பள்ளிவாசலில் (இது போன்று பாங்கு சொல்வதற்காக) மனாராக்களை ஏற்படுத்தவில்லை என்பதே உறுதியாகிறது; அவ்வாறு ஏற்படுத்தி இருந்தால், அது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
خلاصة الوفا بأخبار دار المصطفى (2/ 116):
ولأبن زبالة حدثني محمد بن إسماعيل وغيره قال كان في دار عبد الله بن عمر أسطوانة في قبلة المسجد يؤذن عليها بلال يرقى إليها بأقتاب والأسطوانة مربعة قائمة إلى اليوم يقال لها المطمار وهي في منزل عبيد الله بن عبد الله بن عمر
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு சதுர வடிவ தூண் இருந்தது. அது பள்ளிவாசலின் கிப்லா திசையில் அமைந்திருந்தது. பிலால் (ரலி) அவர்கள் அதில் உள்ள மரப்படியின் மீது ஏறி பாங்கு சொல்வார்கள். அந்தத் தூண் இன்றும் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களின் வீட்டில் இருக்கிறது. அதற்கு “அல்-மித்மார்” என்று கூறப்படும்.
இதற்கு முழு அறிவிப்பாளர்தொடர் இல்லை.
الدرة الثمينة في أخبار المدينة (ص102 ط دار الأرقم):
وذكر أهل السير: أن بلالاً كان يؤذن على أسطوانة في قبلة المسجد يرقى إليها بأقتاب، وهي قائمة إلى اليوم في منزل عبد الله بن عبيد الله بن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنه.
வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்: பிலால் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லா திசையில் அமைந்திருந்த ஒரு தூணின் மீது ஏறி பாங்கு சொல்வார்கள். அந்தத் தூண் பிலால் (ரலி) அவர்கள் ஏறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பலகைகளுடன், (இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் பேரன்) அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் அவர்களின் வீட்டில் இன்றும் நிலைத்திருக்கிறது.
பாங்கின் சத்தம் அதிக தூரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தான் உயரமான இடத்தின் மீது நின்று பாங்கு சொல்ல வேண்டிய தேவை அப்போது ஏற்பட்டிருக்கலாம். இந்தக் கருத்து முஸ்லிம்-1993 போன்ற செய்திகளில் வந்துள்ளன.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-617,
சமீப விமர்சனங்கள்