தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-558

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

558. கடமையான தொழுகைக்காக தன்னுடைய வீட்டிலிருந்து உலூச் செய்து செல்பவரின் கூலி இஹ்ராம் ஆகி ஹஜ் செய்பவரின் கூலியை போன்றதாகும். வேறு எந்த நோக்கதிற்காகவும் இல்லாமல் லுஹா தொழுகைக்காகவே சிரமப்பட்டு லுஹா தொழுபவரின் கூலி, உம்ரா செய்பவரின் கூலியைப் போன்றதாகும்.

இடையில் எந்தவித வீண்பேச்சு இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் தொழுகின்ற இன்னொரு தொழுகை இல்லிய்யீனில் பதியப்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஉமாமா (ரலி)

அபூஉமாமா-அல்பாஹிலீ (ரலி) – Abu Umama al-Bahili

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப்

தந்தை பெயர்: அஜ்லான் பின் வஹ்ப்

வம்சம்: அல்பாஹிலீ

புனைப்பெயர்: அபூஉமாமா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஉமாமா ரலி அவர்களின் இயற்பெயர் சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப் ஆகும். இவர் ஒரு நபித்தோழர். இவர் ஹிஜாஸில் பிறந்தார்.

மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம் ஆகிய இடங்களில் வசித்தார். இவர் ஹிஜ்ரி 86 ஆம் ஆண்டு ஹிம்ஸில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீ தாலிப் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), அம்ர் பின் அப்சா அஸ்ஸலமீ (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் பின் ஹபீப் அல்மஹாரபீ, ஷத்தாத் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ, மம்தூர் அஸ்வத் அபூஸல்லாம், மக்ஹூல் அஷ்ஷாமீ, ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ, காஸிம் பின் அப்துர்ரப், ரஜா பின் ஹய்வா, ஸல்ம் பின் அபில் ஜஃத், காலித் பின் மஃதான், அபூ ஃகாலிப் அர்ராஸிபீ, சுலைம் பின் ஆமிர் அல்குலாஈ

வேறு பெயர்கள்: அபூ இமாமா


ஆதாரம்: muslimscholars.info (4048) · Should verify


حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ، وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لَا يَنْصِبُهُ إِلَّا إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ، وَصَلَاةٌ عَلَى أَثَرِ صَلَاةٍ لَا لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-558.
Abu-Dawood-Alamiah-471.
Abu-Dawood-JawamiulKalim-470.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அபூதவ்பா-ரபீஉ பின் நாஃபிஃ

3 . ஹைஸம் பின் ஹுமைத்

4 . யஹ்யா பின் ஹாரிஸ்

5 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்

6 . அபூஉமாமா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34002-காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அவர்களை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். மேலும் இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று (அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம், அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    போன்ற) சிலர் விமர்சித்திருந்தாலும் அதற்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான் என்றும் கூறியுள்ளனர்.
  • இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் பலமானவர்கள் என்றால் அதில் குறையில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றாலும் அதிகமாக அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/113, தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414, தக்ரீபுத் தஹ்தீப்-1/792)


காஸிம் பின் அப்துர்ரஹ்மான் வழியாக அறிவிப்பவர்களையும், இவரின் வழியாக வரும் அனைத்து செய்திகளையும் ஆய்வு செய்து பார்க்கும்போது இவரைப் பற்றி விமர்சித்தவர்களின் கருத்துக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று தெரிகிறது.

(நூல்: روايات الإمام القاسم بن عبد الرحمن الشامي في الميزان)


1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22273, 22304, அபூதாவூத்-558, 1288,

…


2 . உத்பா பின் அப்த் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ..பலவீனமானவை.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-586,

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அபூதவ்பா-ரபீஉ பின் நாஃபிஃ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹைஸம் பின் ஹுமைத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஹ்யா பின் ஹாரிஸ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

காஸிம் பின் அப்துர்ரஹ்மான்

القاسم بن عبد الرحمن الشامي

ஹி-112 அல்லது 118 ...


இயற்பெயர்: காஸிம்

தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான்

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: ஷாம், மதீனா

பிறப்பு: ஹிஜ்ரீ- …

இறப்பு: ஹிஜ்ரீ-112 அல்லது 118

கால கட்டம்: 3.


1 . இவரிடமிருந்து 37 அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

2 . இவர்களின் செய்திகள் 160. இவற்றில் 49 செய்திகள் சரியானவை. 111 செய்திகள் மற்ற தரத்தில் உள்ளவை.

3 . ஸிகத், ஸதூக் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் 18 பேர். இவர்களின் செய்திகள் 53. இவற்றில் 26 செய்திகள் சரியானவை. 27 செய்திகள் பலவீனமானவை.

4 . பலமானவரா பலவீனமானவரா என்ற கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர்களில் 9 பேர் அறிவித்துள்ளனர். இவர்களின் மொத்த செய்திகள் 26. இவற்றில் 15 செய்திகள் சரியானவை. 11 செய்திகள் பலவீனமானவை.

5 . பலவீனமானவர்கள், விடப்பட்டவர்களில் 10 பேர் அறிவித்துள்ளனர். இவர்களின் மொத்த செய்திகள் 81. இவற்றில் 8 செய்திகளின் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. 73 செய்திகள் பலவீனமானவை.

6 . இவரை சிலர் பலமானவர் என்றும், சிலர் ஸதூக்-நடுத்தரமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் இவர் அதிகம் அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: روايات الإمام القاسم بن عبد الرحمن الشامي في الميزان)

இந்த நூலில் உள்ள தகவலை இன்ஷா அல்லாஹ் பிறகு நாம் சரிபார்த்து பதிவு செய்கிறோம்.


காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அவர்களை இப்னு மயீன், புகாரீ, அபூஹாதிம் ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். மேலும் இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று (அஹ்மத் இமாம், அப்துல்லாஹ் பின் அஹ்மத் போன்ற) சிலர் விமர்சித்திருந்தாலும் அதற்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான் என்றும் கூறியுள்ளனர்.

இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் பலமானவர்கள் என்றால் அதில் குறையில்லை என்று அபூஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/113, தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414)


இமாம் அஹ்மத் அவர்கள், இவர் இடம்பெற்றுள்ள சில செய்திகளை பற்றி கேட்கப்பட்டபோது போது அதை முன்கரான செய்தி என்றும், இதற்கு காரணம் காஸிமின் தவறுதான் என்றும் கூறியுள்ளார்.

(மேலும் இப்னு மயீன் அவர்களின் மாணவர்களில் ஒருவரான) முஃபள்ளல் பின் ஃகஸ்ஸான் அல்ஃகலாயீ என்பவரும் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414)


�المجروحين لابن حبان ت زايد» (2/ 211):

�الْقَاسِم بن عبد الرَّحْمَن مولى يزِيد بن مُعَاوِيَة بن أبي سُفْيَان كنيته أَبُو عبد الرَّحْمَن كَانَ يزْعم أَنه لَقِي أَرْبَعِينَ بَدْرِيًّا روى عَنهُ أهل الشَّام كَانَ مِمَّن يَرْوِي عَن أَصْحَاب رَسُول الله صلى الله عليه وسلم المعضلات وَيَأْتِي عَن الثِّقَات بالأشياء المقلوبات حَيّ يسْبق إِلَى الْقبل أَنه كَانَ الْمُتَعَمد لَهَا

أخبرنَا مَكْحُولٌ قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ أبان قَالَ سَمِعت أَحْمد بن حَنْبَل وَذكر الْقَاسِم مولى يزِيد بن مُعَاوِيَة فَقَالَ مُنكر الحَدِيث مَا أرى الْبلَاء إِلَّا من قبل الْقَاسِم»

இப்னு ஹிப்பான் அவர்கள், இவர் 40 பத்ருஸ் ஸஹாபாக்களை சந்தித்துள்ளதாக கூறுகிறார். இவர் நபித்தோழர்களிடமிருந்து முஃளலான (அறிவிப்பாளர்கள் விடுபட்ட) செய்திகளை அறிவிப்பவர்; பலமானவர்கள் வழியாக, செய்திகளை புரட்டி-மாற்றி அறிவிப்பவர்; இதனால் இவர் இதை வேண்டுமென்றே செய்துள்ளாரோ என நினைக்கத் தோன்றும் என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அஹ்மத் அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாக மக்ஹூல் ---> ஜஃபர் பின் அபான் ---> அஹ்மத் இமாம் என்ற அறிவிப்பாளர்தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்மஜ்ரூஹீன்-இப்னு ஹிப்பான்-2/212)


இப்னு ஹஜர் அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்திலும், அதிகம் ஃகரீபான-அரிதான செய்திகளை அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/792)


இப்னு மயீன், புகாரீ, அபூஹாதிம் ஆகியோர் இவரிடமிருந்து பலவீனமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தான் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தாலும் மேற்கண்ட தகவல்களிலிருந்து இவர் வழியாக வரும் செய்திகளை மற்ற பலமானவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று தெரிகிறது...

அபூஉமாமா (ரலி)

அபூஉமாமா-அல்பாஹிலீ (ரலி) – Abu Umama al-Bahili

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப்

தந்தை பெயர்: அஜ்லான் பின் வஹ்ப்

வம்சம்: அல்பாஹிலீ

புனைப்பெயர்: அபூஉமாமா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஉமாமா ரலி அவர்களின் இயற்பெயர் சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப் ஆகும். இவர் ஒரு நபித்தோழர். இவர் ஹிஜாஸில் பிறந்தார்.

மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம் ஆகிய இடங்களில் வசித்தார். இவர் ஹிஜ்ரி 86 ஆம் ஆண்டு ஹிம்ஸில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீ தாலிப் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), அம்ர் பின் அப்சா அஸ்ஸலமீ (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் பின் ஹபீப் அல்மஹாரபீ, ஷத்தாத் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ, மம்தூர் அஸ்வத் அபூஸல்லாம், மக்ஹூல் அஷ்ஷாமீ, ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ, காஸிம் பின் அப்துர்ரப், ரஜா பின் ஹய்வா, ஸல்ம் பின் அபில் ஜஃத், காலித் பின் மஃதான், அபூ ஃகாலிப் அர்ராஸிபீ, சுலைம் பின் ஆமிர் அல்குலாஈ

வேறு பெயர்கள்: அபூ இமாமா


ஆதாரம்: muslimscholars.info (4048) · Should verify

2 comments on Abu-Dawood-558

  1. ‘மனிதனின் உடலில் 360 மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்காவும் அவர் தர்மம் செய்தாக வேண்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரால் இதைச் செய்ய முடியும் எனக் கேட்கப்பட்ட போது, ‘பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்துவிடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றிவிடுவது,.. போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்ய முடியும். அதற்கு சக்தி பெறாவிட்டால் ழுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் உனக்கு அதை ஈடு செய்யும் என நபியவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
    நூல்: இப்னு குஸைமா 1226, அபூதாவூத் 5242

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    இந்த ஹதீஸின் தரம் பார்க்கவேண்டும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.