தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-558

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

கடமையான தொழுகைக்காக தன்னுடைய வீட்டிலிருந்து உலூச் செய்து செல்பவரின் கூலி இஹ்ராம் ஆகி ஹஜ் செய்பவரின் கூலியை போன்றதாகும். வேறு எந்த நோக்கதிற்காகவும் இல்லாமல் லுஹா தொழுகைக்காகவே சிரமப்பட்டு லுஹா தொழுபவரின் கூலி, உம்ரா செய்பவரின் கூலியைப் போன்றதாகும்.

இடையில் எந்தவித வீண்பேச்சு இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் தொழுகின்ற இன்னொரு தொழுகை இல்லிய்யீனில் பதியப்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(அபூதாவூத்: 558)

حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ، وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لَا يَنْصِبُهُ إِلَّا إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ، وَصَلَاةٌ عَلَى أَثَرِ صَلَاةٍ لَا لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-558.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-470.




1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22273 , 22304 , அபூதாவூத்-5581288 ,

2 comments on Abu-Dawood-558

  1. ‘மனிதனின் உடலில் 360 மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்காவும் அவர் தர்மம் செய்தாக வேண்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரால் இதைச் செய்ய முடியும் எனக் கேட்கப்பட்ட போது, ‘பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்துவிடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றிவிடுவது,.. போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்ய முடியும். அதற்கு சக்தி பெறாவிட்டால் ழுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் உனக்கு அதை ஈடு செய்யும் என நபியவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
    நூல்: இப்னு குஸைமா 1226, அபூதாவூத் 5242

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    இந்த ஹதீஸின் தரம் பார்க்கவேண்டும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.