பின்பற்றப்படுவதற்காக இமாம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தக்பீர் சொன்னால் நீங்கள் தக்பீர் சொல்லுங்கள். அவர் தக்பீர் சொல்கின்ற வரை நீங்கள் தக்பீர் சொல்லாதீர்கள். அவர் ருகூஃ செய்யும் வரை நீங்கள் ருகூஃ செய்யாதீர்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவனின் புகழை அல்லாஹ் செவியுற்று விட்டான்) என்று சொன்னால் யா அல்லாஹ்! இறைவனே! உனக்கே எல்லாப் புகழும்! என்று சொல்லுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் “ஸஜ்தா’ செய்யுங்கள். அவர் ஸஜ்தா செய்யும் வரை நீங்கள் சஜ்தா செய்ய வேண்டாம். அவர் நின்று தொழுதால் நீங்கள் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான “முஸ்லிம்’ உனக்கே எல்லாப் புகழும் (வலக்கல் ஹம்து) என்று அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவீத் குறிப்பிடுகின்றார்கள் :
“அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து” என்று தான் (வேறு வார்த்தையல்ல) என சுலைமானிடமிருந்து அறிவிக்கும் நம்முடைய தோழர்கள் எனக்கு விளக்கம் அளித்தனர்.
(அபூதாவூத்: 603)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ الْمَعْنَى، عَنْ وُهَيْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَلَا تُكَبِّرُوا حَتَّى يُكَبِّرَ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَلَا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ – قَالَ مُسْلِمٌ: وَلَكَ الْحَمْدُ – وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَلَا تَسْجُدُوا حَتَّى يَسْجُدَ، وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعُونَ
قَالَ أَبُو دَاوُدَ: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ أَفْهَمَنِي بَعْضُ أَصْحَابِنَا عَنْ سُلَيْمَانَ
AbuDawood-Tamil-603.
AbuDawood-Shamila-603.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்