தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12482

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12482. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்குச் சொந்தமான ஒரு பேரீத்த மரம் (என் தோட்டத்தை ஒட்டி) இருக்கிறது. (அதை அவர் எனக்குக் கொடுத்தால்) அதையும் சேர்த்து எனது சுற்றுச்சுவரை அமைத்துக் கொள்வேன். அதை எனக்கு வழங்குமாறு அவருக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அன்னாரிடம், “அதை நீ கொடுத்து விடு! உனக்குச் சுவனத்தில் அதற்குப் பகரமாக ஒரு மரம் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

ஆனால் அவர் மறுத்துவிட்டார். அப்போது, அபூ தஹ்தாஹ் (ரலி) அவர்கள் அவரிடம் வந்து, “என்னுடைய தோட்டத்திற்கு பகரமாக உன்னுடைய ஒரு மரத்தை எனக்கு விற்பனை செய்துவிடு” என்று கூறினார். அவரும் விற்றுவிட்டார். உடனே, அபூ தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது தோட்டத்திற்குப் பகரமாக அந்த மரத்தை நான் வாங்கிவிட்டேன். இதை உங்களிடம் கோரிக்கை வைத்தவருக்கு நீங்கள் கொடுப்பதற்காக உங்களிடம் தந்து விட்டேன்” என்று கூறினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எத்தனையோ பேரீத்த மரங்கள் சுவனத்தில் அபூதஹ்தாஹ்விற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன” என்று பல முறை கூறினார்கள்.

உடனே, அபூ தஹ்தாஹ் (ரலி) அவர்கள் தனது மனைவியிடத்தில் வந்து, “உம்மு தஹ்தாஹ்வே! உடனே இந்த தோட்டத்திலிருந்து வெளியேறு! ஏனெனில் சுவனத்தில் கிடைக்கவிருக்கும் பேரித்த மரத்திற்காக இந்தத் தோட்டத்தை நான் விற்றுவிட்டேன்” என்று கூறினார். அதற்கு அவருடைய மனைவி, “இதுவே லாபகரமான வியாபாரம்” என்றோ அதற்கு ஒப்பான வார்த்தையையோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 12482)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ: إِنَّ لِفُلَانٍ نَخْلَةً، وَأَنَا أُقِيمُ حَائِطِي بِهَا، فَأْمُرْهُ أَنْ يُعْطِيَنِي حَتَّى أُقِيمَ حَائِطِي بِهَا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَعْطِهَا إِيَّاهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ ” فَأَبَى، فَأَتَاهُ أَبُو الدَّحْدَاحِ فَقَالَ: بِعْنِي نَخْلَتَكَ بِحَائِطِي. فَفَعَلَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي قَدِ ابْتَعْتُ النَّخْلَةَ بِحَائِطِي. قَالَ: ” فَاجْعَلْهَا لَهُ، فَقَدْ أَعْطَيْتُكَهَا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” كَمْ مِنْ عَذْقٍ رَدَاحٍ لِأَبِي الدَّحْدَاحِ فِي الْجَنَّةِ ” قَالَهَا مِرَارًا. قَالَ: فَأَتَى امْرَأَتَهُ فَقَالَ: يَا أُمَّ الدَّحْدَاحِ اخْرُجِي مِنَ الْحَائِطِ، فَإِنِّي قَدْ بِعْتُهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ. فَقَالَتْ: رَبِحَ الْبَيْعُ. أَوْ كَلِمَةً تُشْبِهُهَا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-12025.
Musnad-Ahmad-Shamila-12482.
Musnad-Ahmad-Alamiah-12025.
Musnad-Ahmad-JawamiulKalim-12245.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.