தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5371

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நீ ஹாஜியைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்குக் கேட்டுக் கொள். ஏனெனில், அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 5371)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْحَارِثِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ، وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ، فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-5371.
Musnad-Ahmad-Shamila-5371.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5220.




إسناد شديد الضعف فيه محمد بن الحارث الحارثي وهو متروك الحديث ، ومحمد بن عبد الرحمن النحوي وهو منكر الحديث (جوامع الكلم)

  • இந்தச் செய்தியில் முஹம்மது பின் ஹாரிஸ், முஹம்மது பின் அப்திர் ரஹ்மான், அப்துர் ரஹ்மான் பின் அபீ ஸைத் ஆகிய மூவர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.(பாகம் 6 பக்கம் 150)

இதில் முஹம்மத் பின் அப்துர்ஹ்மான் அல்பைலமானீ என்பவர் இடம்பெறுகிறார்.

இவர் நபிகளார் பெயரில் இட்டுக்கட்டி பொய்யான செய்திகளைச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்துக்கள்…

تهذيب التهذيب ـ محقق – (9 / 261)

قال عثمان الدارمي عن ابن معين ليس بشئ وقال البخاري وأبو حاتم والنسائي منكر الحديث وقال البخاري وكان الحميدي يتكلم فيه لضعفه وقال أبو حاتم أيضا مضطرب الحديث.

وقال ابن عدي وكل ما يرويه ابن البيلماني فالبلاء فيه منه وإذا روى عنه محمد ابن الحارث فهما ضعيفان.

قلت: وقال ابن حبان حدث عن ابيه بنسخة شبيها بمائتي حديث كلها موضوعة لا يجوز الاحتجاج به ولا ذكره إلا على وجه التعجب وقال الساجي منكر الحديث وقال العقيلي روى عنه صالح بن عبد الجبار ومحمد بن الحارث مناكير

  • இவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் பலவீனமானவராக இருப்பதினால் ஹுமைதீ இவரை விமர்சித்துள்ளதாக புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    குறிப்பிடுகிறார்கள்.
  • இப்னுல் பைலமானீ அறிவிக்கும் செய்தியில் ஏதாவது பிரச்சனை என்றால் அது இதுவாகத் தான் இருக்கும். இவரிடமிருந்து முஹம்மத் பின் ஹாரிஸ் அறிவிக்கிறார். இவ்விருவரும் பலவீனமானவர்களே என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    குறிப்பிட்டுள்ளார்கள்.
  • இவர் தனது தந்தை வழியாக இருநூறு செய்திகளை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார்கள்.
  • இவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று ஸாஜி குறிப்பிட்டுள்ளார்.
  • ஸாலிஹ் பின் அப்துல் ஜப்பார், முஹம்மத் பின் ஹாரிஸ் ஆகியோர் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை இவர் அறிவித்துள்ளார் என்று உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 9, பக்கம்: 231

எனவே இந்தச் செய்தி பலவீனமானதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும்.

3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-53716112 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2727 .

  • ஹாஜிகள் என்ற அடிப்படையில் இல்லாமல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது எனக்காக துஆ செய்யுங்கள் என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

பார்க்க: முஸ்லிம்-5279 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.