தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2344

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

பாடம்:

அல்லாஹ்வையே சார்ந்திருப்பது (முழுநம்பிக்கை கொண்டிருப்பது)

2344. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அல்லாஹ்வின் மீது (நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று) நம்பிக்கை வைக்க வேண்டிய விதத்தில் (பரிபூரணமாக) நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு இறைவன் உணவளிப்பது போன்று நீங்கள் உணவளிக்கப்படுவீர்கள்! பறவைகள் காலையில் வயிறு காலியாக (கூட்டை விட்டு) இரையைத் தேடி வெளியே செல்கின்றன. மாலையில் வயிறு நிரம்ப (கூட்டை) வந்தடைகின்றன.

அறிவிப்பவர்: (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் தான் இந்தச் செய்தியை நாம் அறிகிறோம்.

அபூதமீம் அல்ஜைஷானீ அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் பின் மாலிக் என்பதாகும்.

உமர் பின் கத்தாப் (ரலி)

عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹி-23.

தரம்: நபித்தோழர்.


பயணம் செய்த ஊர்கள்: எகிப்து.


بَابٌ فِي التَّوَكُّلِ عَلَى اللَّهِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الكِنْدِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي تَمِيمٍ الجَيْشَانِيِّ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَأَبُو تَمِيمٍ الجَيْشَانِيُّ اسْمُهُ: عَبْدُ اللَّهِ بْنُ مَالِكٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2266.
Tirmidhi-Shamila-2344.
Tirmidhi-Alamiah-2266.
Tirmidhi-JawamiulKalim-2278.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அலீ பின் ஸயீத்

3 . இப்னுல் முபாரக்

4 . ஹைவா பின் ஷுரைஹ்

5 . பக்ர் பின் அம்ர்

6 . அப்துல்லாஹ் பின் ஹுபைரா

7 . அபூதமீம் ஜைஷானீ-அப்துல்லாஹ் பின் மாலிக்

8 . உமர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9447-பக்ர் பின் அம்ர் அல்மஆஃபிரீ என்பவர் பற்றி ஷைக் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(ஷைக் என்ற வார்த்தையுடன் வேறு வார்த்தையை அவர் இணைத்துக் கூறினால் அதுவே முடிவாகும். பொதுவாக ஷைக் என்று கூறினால் சிலர், இவர் நிலை அறியப்படாதவர் என்று பொருள் கொள்கின்றனர். அதனால் தான் இப்னுல் கத்தான் அவர்கள் இந்த வகையினரை நம்பகத்தன்மை அறியப்படாதவர்கள் என்று கூறியுள்ளார். வேறு சிலர் இந்த வகையினரை ஹஸன் தரம்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று பொருள் கொள்கின்றனர்)

  • இவரின் சில செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
  • திர்மிதீ இமாம் இவர் இடம்பெறும் செய்தியை ஹஸன் ஸஹீஹ் என்று கூறியுள்ளார் என்பதால் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கருதியுள்ளார் எனத் தெரிகிறது.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவரின் செய்தியை மற்றவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவரை பலமானவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்திலும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/390, தஹ்தீபுல் கமால்-4/221, தாரீகுல் இஸ்லாம்-3/624, 3/823, ஸியர்-6/203, தஹ்தீபுத் தஹ்தீப்-1/245, தக்ரீபுத் தஹ்தீப்-1/176, லிஸானுல் மீஸான்-9/269)


அப்துல்லாஹ் பின் ஹுபைரா அவர்களிடமிருந்து ராவீ-25382-இப்னு லஹீஆ அவர்களும் அறிவித்துள்ளார்.

(பார்க்க: அஹ்மத்-370 , 373 , இப்னு மாஜா-4164)

இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் வஹ்ப் போன்றோர் அறிவித்துள்ளனர் என்பதால் இப்னு லஹீஆவின் செய்தி ஏற்கத்தக்கதாகும்.

மேலும் அப்துல்லாஹ் பின் ஹுபைரா, பக்ர் பின் அம்ர் ஆகிய இருவரும் இப்னு லஹீஆவின் ஆசிரியர்கள் ஆவார்கள். இப்னு லஹீஆ இந்த இருவரிடமிருந்தும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்…

எனவே இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும். இதனடிப்படையில் தான் திர்மிதீ அவர்கள் இதை ஹஸன் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.


1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-559 , முஸ்னத் தயாலிஸீ-51 , அஹ்மத்-205 , 370 , 373 , அஸ்ஸுஹ்த்-அஹ்மத்-97 , முஸ்னத் அப்து பின் ஹுமைத்-10 , இப்னு மாஜா-4164 , திர்மிதீ-2344 , முஸ்னத் பஸ்ஸார்-340 , குப்ரா நஸாயீ-11805 , முஸ்னத் அபீ யஃலா-247 , இப்னு ஹிப்பான்-730 , ஹாகிம்-7894 ,

…


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

3 . ஸஃத் பின் கைஸமா… (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-49.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-6472 ,

திர்மிதீ இமாம்

இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அலீ பின் ஸயீத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்னுல் முபாரக்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹைவா பின் ஷுரைஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

பக்ர் பின் அம்ர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் ஹுபைரா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூதமீம் ஜைஷானீ-அப்துல்லாஹ் பின் மாலிக்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

உமர் (ரலி)

عمر بن أبي سلمة بن عبد الرحمن بن عوف

உமர் பின் அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்.


உமர் பின் அபூஸலமா அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

இவரைப் பற்றி ஷுஅபா, அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத், இப்னு ஸஃத், இப்னுல் மதீனீ, அபூஹாதிம், நஸாயீ, இப்னு குஸைமா போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு மயீன் அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னு அபூகைஸமா கூறியுள்ளார். (ஆனால் ஹுஷைம் இவரிடமிருந்து அறிவிப்பது பலவீனம் என்ற இப்னு மயீன் கூறியுள்ளார்)


இப்னு மயீன் அவர்கள், இவரை சுமாரானவர் என்ற தரத்தில் கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர்.

ஸுஹைர் பின் ஹர்ப் அவர்கள், இவரை ஸாலிஹ் என்று கூறியுள்ளார்.

அஹ்மத் அவர்கள், இவரை ஸாலிஹ் என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார்.

புகாரி அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர் என்றும் சில ஹதீஸ்களில் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இஜ்லீ, இப்னு அதீ போன்றோர் இவரை நடுத்தரமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு ஹஜர் அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர், சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.