தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம்: 1

தூய்மைப் பற்றிய நபிமொழிகள்.

பாடம்: 1

(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது என்பது குறித்து வந்துள்ளவை.

  1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களில் இருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (அல்லாஹ்வால்) ஏற்கப்படாது.

அறிவிப்பவர்: (ரலி)


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இவற்றில் அறிவிப்பாளர் ஹன்னாத் பின் ஸரிய்யீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “தூய்மை மூலமே தவிர எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” என்று உள்ளது.


அபூஈஸா (என்ற) திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இது மிகச் சரியானதும், அழகானதுமாகும்.

மேலும் இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபுல்மலீஹ் பின் உஸாமா (ரஹ்) அவர்களிடமிருந்து அவரின் தந்தை (உஸாமா பின் உமைர்-ரலி) வழியாகவும், அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளன.

அபுல்மலீஹ் பின் உஸாமா அவர்களின் இயற்பெயர் ஆமிர் ஆகும். இவருக்கு ஸைத் பின் உஸாமா பின் உமைர் அல்ஹுதலீ என்றும் கூறப்படும்.

இப்னு உமர் (ரலி)

عبد الله بن عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப்

தந்தை பெயர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

வம்சம்: குறைஷி, பனூ அதீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 10, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மகனும், நபித்தோழரும் ஆவார். சிறு வயதிலேயே தம் தந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று, அவருடன் ஹிஜ்ரத் செய்தார். சிறுவராக இருந்ததால் உஹுத் போரில் அனுமதிக்கப்படவில்லை; கந்தக் போரிலும் அதற்குப் பின் நடந்த போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்.

ஹதீஸிலும் மார்க்கச் சட்டத்திலும் முன்னணி அறிஞராக இருந்தார்; இறையச்சம், நேர்மை, நபிவழிச் செய்திகளில் ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு மக்காவில் மரணித்தார் என்று பலர் கூறியுள்ளனர்; ஹிஜ்ரி 73 என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), பிலால் பின் ரபாஹ் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸுஹைப் பின் ஸினான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆஇஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்), நாஃபிஉ (ரஹ்), ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), காஸிம் பின் முஹம்மத் (ரஹ்), வாகித் பின் அப்துல்லாஹ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஸைத் பின் அப்துல்லாஹ் (ரஹ்), பிலால் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் உமர், இப்னு உமர் (ரலி), அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (18) · Should verify


بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

أَبْوَابُ الطَّهَارَةِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

1 – بَابُ مَا جَاءَ لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، ح وحَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»،

قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ»

هَذَا الْحَدِيثُ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَحْسَنُ. وَفِي الْبَابِ عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ. وَأَبُو الْمَلِيحِ بْنُ أُسَامَةَ اسْمُهُ عَامِرٌ، وَيُقَالُ: زَيْدُ بْنُ أُسَامَةَ بْنِ عُمَيْرٍ الْهُذَلِيُّ


Tirmidhi-Tamil-1.
Tirmidhi-TamilMisc-1.
Tirmidhi-Shamila-1.
Tirmidhi-Alamiah-1.
Tirmidhi-JawamiulKalim-1.



 

 

 


இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்தியே மிகச் சரியானது என திர்மிதீ இமாம் கூறியுள்ளார். என்றாலும் திர்மிதீ நூலுக்கு விளக்கவுரை எழுதிய அப்துர்ரஹ்மான் முபாரக்பூரீ அவர்கள் இதை மறுத்து இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்தியே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்…

…

 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸிமாக் பின் ஹர்ப் —> முஸ்அப் பின் ஸஃத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-4700 , 4969 , 5123 , 5205 , 5419 , முஸ்லிம்-382 , இப்னு மாஜா-272 , திர்மிதீ-1 , முஸ்னத் அபீ யஃலா-, முன்தகா-, இப்னு குஸைமா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,

  • வகீஃ —> முஜம்மிஃ —> காலித் பின் ஸைத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,


2 . உஸாமா பின் உமைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-59 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-273 .

4 . அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-274 .

5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்தக்ரஜ் அபீ அவானா…

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-135 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள் பிறகு சேர்க்கப்படும்.

2 comments on Tirmidhi-1

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.