بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அத்தியாயம்: 1
தூய்மைப் பற்றிய நபிமொழிகள்.
பாடம்: 1
(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது என்பது குறித்து வந்துள்ளவை.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களில் இருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (அல்லாஹ்வால்) ஏற்கப்படாது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இவற்றில் அறிவிப்பாளர் ஹன்னாத் பின் ஸரிய்யீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “தூய்மை மூலமே தவிர எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” என்று உள்ளது.
அபூஈஸா (என்ற) திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இது மிகச் சரியானதும், அழகானதுமாகும்.
மேலும் ஆமிர் என்றும் ஸைத் என்றும் கூறப்படும் அபுல்மலீஹ் பின் உஸாமா (ரஹ்) அவர்களிடமிருந்து அவரின் தந்தை (உஸாமா பின் உமைர்-ரலி) வழியாகவும், அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
(திர்மிதி: 1)بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
أَبْوَابُ الطَّهَارَةِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
1 – بَابُ مَا جَاءَ لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، ح وحَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»،
قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ»
هَذَا الْحَدِيثُ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَحْسَنُ. وَفِي الْبَابِ عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ. وَأَبُو الْمَلِيحِ بْنُ أُسَامَةَ اسْمُهُ عَامِرٌ، وَيُقَالُ: زَيْدُ بْنُ أُسَامَةَ بْنِ عُمَيْرٍ الْهُذَلِيُّ
Tirmidhi-Tamil-1.
Tirmidhi-TamilMisc-1.
Tirmidhi-Shamila-1.
Tirmidhi-Alamiah-1.
Tirmidhi-JawamiulKalim-1.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்தியே மிகச் சரியானது என திர்மிதீ இமாம் கூறியுள்ளார். என்றாலும் திர்மிதீ நூலுக்கு விளக்கவுரை எழுதிய அப்துர்ரஹ்மான் முபாரக்பூரீ அவர்கள் இதை மறுத்து இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்தியே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்…
…
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸிமாக் பின் ஹர்ப் —> முஸ்அப் பின் ஸஃத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-4700 , 4969 , 5123 , 5205 , 5419 , முஸ்லிம்-382 , இப்னு மாஜா-272 , திர்மிதீ-1 , முஸ்னத் அபீ யஃலா-, முன்தகா-, இப்னு குஸைமா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
- வகீஃ —> முஜம்மிஃ —> காலித் பின் ஸைத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,
2 . உஸாமா பின் உமைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-59 .
3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-273 .
4 . அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-274 .
5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்தக்ரஜ் அபீ அவானா…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-135 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள் பிறகு சேர்க்கப்படும்.
Assalamu Alaikum
Walaikum salam Sheik bro!