தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2024

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வழிபாடு

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி (வழிபாடுக்கு ஆயத்தமாகி) விடுவார்கள்; இரவில் (இறையை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்.

அத்தியாயம்: 32

(புகாரி: 2024)

بَابُ العَمَلِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»


Bukhari-Tamil-2024.
Bukhari-TamilMisc-2024.
Bukhari-Shamila-2024.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




2 comments on Bukhari-2024

  1. ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வழிபாடு குறித்து வரும் இந்த ஹதீஸில் “ شَدَّ مِئْزَرَهُ،” என்ற வார்த்தைக்கு ” இல்லறத் தொடர்பை நிறுத்தி” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ” வரிந்து கட்டிக்கொண்டு” என்று ஆங்கில மொழி பெயர்ப்பிலும், Dictionary யிலும் உள்ளது.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      شَدَّ مِئْزَرَهُ என்ற வார்த்தைக்கு இரண்டு பொருளும் கொள்ளலாம் என்பதற்கு அரபுக் கவிதைகளில் குறிப்பு உள்ளது. இந்த செய்தியின் விளக்க குறிப்பில் இப்னு ஹஜர் அவர்கள் இதைப் பற்றி கூறியுள்ளார். எனவே இங்கு இரு பொருளும் கூறப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.