தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2023

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 4 மக்கள் சச்சரவிட்டுக் கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்படுதல்.

2023. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்.

எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!’ எனக் கூறினார்கள்.
Book : 32


بَابُ رَفْعِ مَعْرِفَةِ لَيْلَةِ القَدْرِ لِتَلاَحِي النَّاسِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ

خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَنَا بِلَيْلَةِ القَدْرِ فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ المُسْلِمِينَ فَقَالَ: «خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ القَدْرِ، فَتَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ، فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ، وَالسَّابِعَةِ، وَالخَامِسَةِ»


Bukhari-Tamil-2023.
Bukhari-TamilMisc-2023.
Bukhari-Shamila-2023.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-1893.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

முஹம்மத் பின் முஸன்னா-அல்அனஸீ

முஹம்மத் பின் முஸன்னா-அல்அன்ஸீ (ரஹ்) – Muhammad bin al-Muthna

இறப்பு: ஹிஜ்ரி 252

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸன்னா பின் உபைது பின் கைஸ் பின் தீனார்

தந்தை பெயர்: முஸன்னா பின் உபைது பின் கைஸ் பின் தீனார்

வம்சம்: அல்அன்ஸீ

புனைப்பெயர்: அபூ மூஸா, அல்ஸமன்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 167

இறப்பு: ஹிஜ்ரி 252

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

முஹம்மத் பின் முஸன்னா பின் உபைது பின் கைஸ் பின் தீனார் ரஹ் அவர்கள் அபூ மூஸா அல்அன்ஸீ அல்பஸரீ அல்ஸமன் என்றும் அறியப்படுகிறார். இவர் ஹிஜ்ரி 167ல் பிறந்து ஹிஜ்ரி 252ல் மரணமடைந்தார். இவர் மிகப் பலமானவர் ஆவார்.

ஸுஃப்யான் பின் உயைனா, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் போன்ற பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ, இப்னு மாஜா போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுஃப்யான் பின் உயைனா, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, காலித் பின் அல்ஹாரிஸ், யஸீத் பின் ஸரீஃ, ஹஃப்ஸ் பின் கியாத், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் ஜஃபர் கந்தர், அபூ ஆஸிம் அள்ளஹ்ஹாக் பின் மக்லத், அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ, முஆத் பின் முஆத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ, இப்னு மாஜா, இப்னு அபீ துன்யா, அபூ ஸுர்ஆ அர்ராஸீ, அபூ ஹாதிம் அர்ராஸீ, முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் குஸைமா, முஹம்மத் பின் ஹாரூன் அர்ரூயானீ

வேறு பெயர்கள்: அபூ மூஸா, முஹம்மத் பின் அல்முஸன்னா, அல்ஸமன், அபூ மூஸா அல்அன்ஸீ, அபூ மூஸா அல்பஸரீ


ஆதாரம்: muslimscholars.info (30170) · Should verify

காலித் பின் ஹாரிஸ்-அல்ஹுஜைமீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹுமைத் பின் தய்ருவைஹ்-அத்தவீல்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அனஸ் பின் மாலிக்-அபூஹம்ஸா//உபாதா பின் ஸாமித்-அல்அன்ஸாரி (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.