தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2024

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 5

ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வழிபாடு

2024. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி (வழிபாடுக்கு ஆயத்தமாகி) விடுவார்கள்; இரவில் (இறையை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்.

அத்தியாயம்: 32


بَابُ العَمَلِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»


Bukhari-Tamil-2024.
Bukhari-TamilMisc-2024.
Bukhari-Shamila-2024.
Bukhari-Alamiah-.
Bukhari-jawamiulkalim-1894.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

இப்னுல் மதீனீ-அலீ பின் அப்துல்லாஹ்

علي بن المديني

இறப்பு: ஹிஜ்ரி 234, பஸரா

தரம்: மிகப் பலமானவர், இமாம், தன் காலத்தவர்களில் ஹதீஸ் மற்றும் அதன் குறைபாடுகளைப் பற்றி அதிகம் அறிந்தவர்


விபரங்கள்

இயற்பெயர்: அலீ பின் அப்துல்லாஹ் பின் ஜஃபர் பின் நஜீஹ் அஸ்ஸஃதீ

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர்

வம்சம்: அஸ்ஸஃதீ

புனைப்பெயர்: அபூ அல்-ஹஸன்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா, மக்கா, யமன், பக்தாத், ஸாமர்ரா

பிறப்பு: ஹிஜ்ரி 162, பஸரா

இறப்பு: ஹிஜ்ரி 234, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அலீ பின் அப்துல்லாஹ் பின் ஜஃபர் பின் நஜீஹ் அஸ்ஸஃதீ ரஹ் அவர்கள் இப்னுல் மதீனீ என்று அறியப்பட்டவர். இவர் ஹிஜ்ரி 162 இல் பஸராவில் பிறந்து ஹிஜ்ரி 234 இல் பஸராவில் காலமானார். இவர் மிகப் பலமானவர், இமாம், தன் காலத்தவர்களில் ஹதீஸ் மற்றும் அதன் குறைபாடுகளைப் பற்றி அதிகம் அறிந்தவர் ஆவார்.

புகாரி இமாம் ரஹ் அவர்கள், “நான் அலீ பின் அல்-மதீனீயிடம் தவிர வேறு யாரிடமும் என்னை சிறியவனாகக் கருதியதில்லை” என்று கூறியுள்ளார்கள். இவரது ஆசிரியர் ஸுஃப்யான் பின் உயைனா ரஹ் அவர்கள், “அலீயின் மீது நான் கொண்ட அன்பிற்காக நீ என்னைக் குறை கூறுகிறாயா? அல்லாஹ்வின் மீது ஆணையாக!

அவர் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதை விட நான் அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ் கலையில் பெரும் அறிஞராகத் திகழ்ந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்லாஹ் பின் ஜஃபர், ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் உயைனா, இஸ்மாயீல் பின் இப்ராஹீம்-இப்னு அலீயா, அபூ ளம்ரா அனஸ் பின் அய்யாத், பிஷ்ர் பின் அல்முஃபள்ளல், காலித் பின் அல்ஹாரிஸ், யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், யஸீத் பின் ஸரீஃ, ஹுஷைம் பின் பஷீர், முஆத் பின் முஆத், அப்துல் அஃலா பின் அப்துல் அஃலா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், அபூ தாவூத், திர்மிதீ இமாம், நஸாயீ இமாம், அஹ்மத் பின் ஹன்பல், ஹஸன் பின் அலீ அல்கல்லால், ஹுமைத் பின் ஸன்ஜவைஹ், இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் அல்காழீ, அபூ ஹாதிம் அர்ராஸீ, முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, யஃகூப் பின் ஷைபா அஸ்ஸதூஸீ, அப்துல்லாஹ் பின் அலீ

வேறு பெயர்கள்: அலீ பின் அப்துல்லாஹ், இப்னுல் மதீனீ


ஆதாரம்: muslimscholars.info (30026) · Should verify

ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா

سفيان بن عيينة بن ميمون

தரம்: மிகப் பலமானவர்.


பயணம் செய்த ஊர்கள்: எகிப்து.

அப்துர்ரஹ்மான் பின் உபைத்-அஸ்ஸஃலபீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஸ்லிம் பின் ஸபீஹ்-அல்ஹம்தானீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

மஸ்ரூக் பின் அஜ்தஃ-அல்ஹம்தானீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரலி)

நபித்தோழி, நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.

2 comments on Bukhari-2024

  1. ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வழிபாடு குறித்து வரும் இந்த ஹதீஸில் “ شَدَّ مِئْزَرَهُ،” என்ற வார்த்தைக்கு ” இல்லறத் தொடர்பை நிறுத்தி” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ” வரிந்து கட்டிக்கொண்டு” என்று ஆங்கில மொழி பெயர்ப்பிலும், Dictionary யிலும் உள்ளது.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      شَدَّ مِئْزَرَهُ என்ற வார்த்தைக்கு இரண்டு பொருளும் கொள்ளலாம் என்பதற்கு அரபுக் கவிதைகளில் குறிப்பு உள்ளது. இந்த செய்தியின் விளக்க குறிப்பில் இப்னு ஹஜர் அவர்கள் இதைப் பற்றி கூறியுள்ளார். எனவே இங்கு இரு பொருளும் கூறப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.