தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20300

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பகரா (2-வது) அத்தியாயம் குர்ஆனில் உயர்ந்ததும், சிறந்ததும் ஆகும். அதனின் ஒவ்வொரு வசனத்துடனும் 80 வானவர்கள் இறங்கினர். ‘அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்னும் வாசகம் அர்ஷின் அடியிலிருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.

யாஸீன் (36-வது) அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்படுவார். மேலும் நீங்கள் உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு அதை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 20300)

حَدَّثَنَا عَارِمٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

الْبَقَرَةُ سَنَامُ الْقُرْآنِ وَذُرْوَتُهُ، نَزَلَ مَعَ كُلِّ آيَةٍ مِنْهَا ثَمَانُونَ مَلَكًا، وَاسْتُخْرِجَتْ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} [البقرة: 255] مِنْ تَحْتِ الْعَرْشِ، فَوُصِلَتْ بِهَا، أَوْ فَوُصِلَتْ بِسُورَةِ الْبَقَرَةِ، وَيس قَلْبُ الْقُرْآنِ، لَا يَقْرَؤُهَا رَجُلٌ يُرِيدُ اللَّهَ والدَّارَ الْآخِرَةَ إِلَّا غُفِرَ لَهُ، وَاقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-19415.
Musnad-Ahmad-Shamila-20300.
Musnad-Ahmad-Alamiah-19415.
Musnad-Ahmad-JawamiulKalim-19828.




  • இந்த செய்தியில் மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரும், இவரிடமிருந்து அறிவிக்கும் அவரின் மகனும் யாரென தெளிவாக கூறப்படவில்லை என்பதால் அறியப்படாதவர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமாகிறது.
  • இதே கருத்தில் வரும் வேறு செய்திகளில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை வழியாக, மஃகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.

பார்க்க : அபூதாவூத்-3121, இப்னு மாஜா-1448 ,

  • இதனடிப்படையில் பார்த்தாலும் இந்த ஹதீஸ் பலவீனமாகும். ஏனெனில் அபூ உஸ்மான், அவரின் தந்தை இருவரும் யார் என அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர்.
  • இப்னுல் கத்தான் அவர்கள் அபூ உஸ்மான், அவரின் தந்தை இருவரும் யார் என அறியப்படாதவர்கள்; இந்த ஹதீஸ் அறிவிப்பளார் தொடர் மவ்கூப், குளறுபடியானது என்றும்,
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் அபூஉஸ்மான் அறிவிக்கும் செய்தி பலவீனமானது என்றும், இந்தக் கருத்தில் வரும் எந்த செய்தியும் சரியானதல்ல என்றும் கூறியுள்ளனர்.

நூல் : தல்கீஸ், பாகம்: 2, பக்: 104

أعله بالاضطراب وبالوقف وبجهالة حال أبي عثمان وأبيه
التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير: (2 / 212)

  • இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.

பார்க்க : அஹ்மத்-20300 , 20301 , 20314 , தயாலிஸீ-973 , இப்னு அபீ ஷைபா-10853 , அபூதாவூத்-3121 , இப்னு மாஜா-1448 , குப்ரா நஸாயீ-10846 , 10847 , இப்னு ஹிப்பான்-3002 , அல்முஃஜமுல் கபீர்-510 , 511 , 541 , ஹாகிம்-2074 , குப்ரா பைஹகீ-6600 ,

மேலும் பார்க்க : அஹ்மத்-16969 , திர்மிதீ-2889 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.