தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16969

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் மரணவேளையில் அவர்களை சந்தித்த என்னுடைய சில ஆசிரியர்கள் கூறியதாவது:

ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மரணவேதனை கடுமையானபோது அவர்கள், உங்களில் யாராவது யாஸீன் அத்தியாயத்தை (இப்போது) ஓதமுடியுமா? என்று கேட்டார்கள். அப்போது ஸாலிஹ் பின் ஷுரைஹ் (ரஹ்) அதை ஓதினார். நாற்பது வசனங்களை ஓதி முடித்திருந்தபோது ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது.

அதனால் தான், மரணத்தை நெருங்கியவர்களிடம் யாஸீன் அத்தியாயம் ஓதப்பட்டால் அவரின் மரணவேதனை இலேசாக்கப்படும் என அந்த ஆசிரியர்கள் கூறினர்.

இப்னு மஃபத் மரணதருவாயில் இருக்கும் போது, அவரிடத்தில் ஈஸா பின் முஃதமிர் யாஸீன் அத்தியாயத்தை ஓதினார்.

அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அம்ர் (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 16969)

حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، حَدَّثَنِي الْمَشْيَخَةُ،

أَنَّهُمْ حَضَرُوا غُضَيْفَ بْنَ الْحَارِثِ الثُّمَالِيَّ، حِينَ اشْتَدَّ سَوْقُهُ، فَقَالَ: «هَلْ مِنْكُمْ أَحَدٌ يَقْرَأُ يس؟» قَالَ: فَقَرَأَهَا صَالِحُ بْنُ شُرَيْحٍ السَّكُونِيُّ، فَلَمَّا بَلَغَ أَرْبَعِينَ مِنْهَا قُبِضَ، قَالَ: وَكَانَ الْمَشْيَخَةُ يَقُولُونَ: إِذَا قُرِئَتْ عِنْدَ الْمَيِّتِ خُفِّفَ عَنْهُ بِهَا قَالَ صَفْوَانُ: «وَقَرَأَهَا عِيسَى بْنُ الْمُعْتَمِرِ عِنْدَ ابْنِ مَعْبَدٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16969.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16625.




  • மரணத்தை நெருங்கியவர்களிடம் யாஸீன் அத்தியாயம் ஓதப்பட்டால் அவரின் மரணவேதனை இலேசாக்கப்படும் என்ற கருத்தை கூறியவர்கள் தாபியீன்கள் என்பதால் இது மக்தூஃவான செய்தியாகும்.
  • இந்த செய்தியை பொய்யர்களும், பலவீனமானவர்களும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துவிட்டனர் என அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஸில்ஸிலதுள் ளயீஃபா-5219 .
  • ‘மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அல்ஃபிர்தௌஸ், அக்பாரு அஸ்பஹான், முஸ்னது ரூயானீ  போன்ற நூல்களில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதை அறிவிக்கும் மர்வான் பின் ஸாலிம் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது பொய்யான செய்தியாகும்.
  • யாஸீன் என்பது 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம். மற்ற அத்தியாயங்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாஸீனையும் நமது நன்மைக்காக ஓதலாம். இறந்தவரின் நன்மைக்காக இதை ஓதக் கூடாது.

மேலும் பார்க்க : அஹ்மத்-20300 , திர்மிதீ-2889 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.