ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.
அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)
(நஸாயி: 2416)أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ، قَالَ: حَدَّثَنِي أَبُو النَّضْرِ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ، عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ، عَنْ حَفْصَةَ، قَالَتْ:
أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: صِيَامَ عَاشُورَاءَ، وَالْعَشْرَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-2373.
Nasaayi-Shamila-2416.
Nasaayi-Alamiah-2373.
Nasaayi-JawamiulKalim-2383.
- இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூஇஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.
- இந்த செய்தி பலவீனம் என்றாலும் இதில் கூறப்படும் நற்செயல்கள் பற்றி வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.
- துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பார்க்க: புகாரி-969 .
- எனவே ஹஜ் பெருநாளை தவிர்த்து துல்ஹஜ் மாதம் முதல் 9 நாட்கள் நோன்பு வைப்பது சிறப்பிற்குரிய அமல்தான்…
மேலும் பார்க்க: அபூதாவூத்-2437 .
சமீப விமர்சனங்கள்