ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அரஃபாவில் உள்ளவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 2440)بَابٌ فِي صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَوْشَبُ بْنُ عُقَيْلٍ، عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ، حَدَّثَنَا عِكْرِمَةُ، قَالَ:
كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، فِي بَيْتِهِ فَحَدَّثَنَا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2084.
Abu-Dawood-Shamila-2440.
Abu-Dawood-Alamiah-2084.
Abu-Dawood-JawamiulKalim-2087.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
..
- இதில் இடம்பெறும் மஹ்தீ பின் ஹரிப் என்ற அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தி.
- ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அரஃபா நாளில் நோன்பு நோற்கவில்லை.
பார்க்க: புகாரி-1989.
- நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள்.
பார்க்க: முஸ்லிம்-2497.
- எனவே அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்பது நபிவழி அல்ல.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-8031, 9760, இப்னு மாஜா-1732, அபூதாவூத்-2440,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-773,
சமீப விமர்சனங்கள்