தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-90

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

(இப்னுமாஜா: 90)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ، وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِخَطِيئَةٍ يَعْمَلُهَا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-87.
Ibn-Majah-Shamila-90.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-87.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24474-அப்துல்லாஹ் பின் அபுல் ஜஃத் பற்றி இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்று அளிக்கவில்லை.
  • இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை நம்பகமானவர்களின் பட்டியலில் குறிப்பிடும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று முடிவு செய்ய முடியாது.
  • மேலும் ஸவ்பான் (ரலி) ஷாம் நாட்டைச் சேர்ந்தவர். அப்துல்லாஹ் பின் அபுல் ஜஃத் கூஃபாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் செவியேற்றிருக்க வாய்ப்பில்லை.

1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29867 , அஹ்மத்-22386 , 22413 , 22438 , இப்னு மாஜா-90 , 4022 , இப்னு ஹிப்பான்-872 , குப்ரா நஸாயீ-11775 , அல்முஃஜமுல் கபீர்-1442 , ஹாகிம்-1814 , 6038 ,

2 . ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2139 .

3 . முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1494 .

இந்தக் கருத்துடன் தொடர்புடைய சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-2067 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.