நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உலகில் அதிமாக என் மீது ஸலவாத் கூறியவரே மறுமை நாளில் உங்களிலே எல்லா வகையிலும் எனக்கு நெருக்கமானவர் ஆவார். ஜூம்ஆ பகலிலும் இரவிலும் என் மீது ஸலவாத் கூறியவரின் நூறு தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து விடுவான்.
எழுபது தேவைகள் மறுமை தொடர்புடையதாகவும், முப்பது தேவைகள் உலகத் தொடர்புடையதாகவும் இருக்கும். பிறகு இதற்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமிப்பான். அவர் பலிப்பிராணிகள் உங்களிடம் நுழைந்து வருவதைப் போன்று எனது கப்ரில் நுழைந்து வருவார். என் மீது ஸலவாத் கூறியவரின் பெயர், அவரது பாரம்பரியம் என அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் எனக்கு அவ்வானவர் தெரிவிப்பார். என்னிடத்தில் உள்ள வெள்ளைப் பதிவேட்டில் அவற்றை நான் குறித்துக் கொள்வேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(shuabul-iman-2773: 2773)أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ السِّقَاءِ الْمُقْرِئُ، حَدَّثَنَا وَالِدِي أَبُو عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو رَافِعٍ أُسَامَةُ بْنُ عَلِيِّ بْنِ سَعِيدٍ الدَّارِمِيُّ بِمِصْرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَالِمٍ الصَّائِغُ، حَدَّثَتْنَا حَكَامَةُ بِنْتُ عُثْمَانَ بْنِ دِينَارٍ، أَخِي مَالِكِ بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، خَادِمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّ أَقْرَبَكُمْ مِنِّي يَوْمَ الْقِيَامَةِ فِي كُلِّ مَوْطِنٍ أَكْثَرُكُمْ عَلَيَّ صَلَاةً فِي الدُّنْيَا مَنْ صَلَّى عَلَيَّ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَةِ الْجُمُعَةِ، قَضَى اللهُ لَهُ مِائَةَ حَاجَةٍ، سَبْعِينَ مِنْ حَوَائِجِ الْآخِرَةِ، وَثَلَاثِينَ مِنْ حَوَائِجِ الدُّنْيَا، ثُمَّ يُوَكِّلُ اللهُ بِذَلِكَ مَلَكًا يُدْخِلُهُ فِي قَبْرِهِ كَمَا يُدْخِلُ عَلَيْكُمُ الْهَدَايَا، يُخْبِرُنِي مَنْ صَلَّى عَلَيَّ بِاسْمِهِ وَنَسَبِهِ إِلَى عَشِيرَتِهِ فَأُثْبِتُهُ عِنْدِي فِي صَحِيفَةٍ بَيْضَاءَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2773.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2780.
إسناد شديد الضعف فيه حكامة بنت عثمان البصرية وهو متروك الحديث (جوامع الكلم)
9630 – عُثْمَان بْن دِينَار أَخُو مَالك بْن دِينَار يروي عَنْ مَالك بْن دِينَار رَوَت عَنْهُ ابْنَته حَكَّامَة بنت عُثْمَان بْن دِينَار وحكامة لَا شَيْء
இதில் ஹகாமா என்பவர் தம் தகப்பனார் உஸ்மான் பின் தீனார் வழியாக அறிவிப்பதாக உள்ளது.
ஹகாமா என்பவர் ஹதீஸ் துறையில் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.விமர்சனம் செய்துள்ளார்.
(பார்க்க : ஸிகாத் பாகம் 7 பக் 194 )
சமீப விமர்சனங்கள்