தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2617

 

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2617. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

அத்தியாயம்: 51

(புகாரி: 2617)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»، فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-Tamil-2617.
Bukhari-TamilMisc-2617.
Bukhari-Shamila-2617.
Bukhari-Alamiah-2424.
Bukhari-JawamiulKalim-2436.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அப்துல்லாஹ் பின் அப்துல்வஹ்ஹாப்

3 . காலித் பின் ஹாரிஸ்

4 . ஷுஅபா

5 . ஹிஷாம் பின் ஸைத்

6 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


 


3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    —> ஹிஷாம் பின் ஸைத் —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-13285, புகாரி-2617, அல்அதபுல் முஃப்ரத்-243, முஸ்லிம்-4408, அபூதாவூத்-4508, முஸ்னத் பஸ்ஸார்-7398, 7399, அல்முஃஜமுல் அவ்ஸத்-2417, குப்ரா பைஹகீ-16005, 16006, 19716, …


  • முபாரக் பின் ஃபளாலா —> ஹஸன் பஸரீ —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6675,


 


மேலும் பார்க்க: புகாரி-3169.

2 comments on Bukhari-2617

  1. இந்த ஹதீஸின் தரம் என்ன இதே போன்ற ஒரு ஹதீஸை நீங்கள் பலவீனமான ஹதீஸ் என்று சொல்லி உள்ளீர்கள் ❓

    https://tamil.quranandhadis.com/bukhari-4428/?hilite=5%3A67

    இந்த விருந்தை உண்டதன் காரணமாக பிஸிர் இப்னு பரா என்ற சஹாபி இறந்ததாகவும் ஹதீஸ் உள்ளது.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இந்தக் கருத்தில் வரும் செய்திகள் இன்னும் ஒன்று சேர்க்கப்படவில்லை. அதனால் தான் இவ்வாறு சிலவை சரியானது என்று உள்ளது. இன்ஷா அல்லாஹ் சரி செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.