மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)
(ஹாகிம்: 6236)مَا حَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْفَقِيهُ بِبَغْدَادَ، ثَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ الرَّقِّيُّ، ثَنَا أَبِي، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ، قَالَ:
كَانَتْ بِالْمَدِينَةِ امْرَأَةٌ تَخْفِضُ النِّسَاءَ يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْفِضِي وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَنْضَرُ لِلْوَجْهِ وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-6236.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-6253.
إسناد شديد الضعف فيه العلاء بن هلال الباهلي وهو ضعيف جدا (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹிலால் பின் அலாஉ என்பவரின் தந்தையான; ராவீ-28798-அலாஉ பின் ஹிலால் என்பவர் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் முன்கருல் ஹதீஸ் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் அறிவிப்பாளர்தொடர்களையும், பெயர்களையும் மாற்றி அறிவிக்கக்கூடியவர் என்று விமர்சித்துள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/349)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8137 , ஹாகிம்-6236 , குப்ரா பைஹகீ-17561 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-5271 .
சமீப விமர்சனங்கள்