நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளை தொழாமல் தூங்கி விட்டார்கள். சூரியன் உதயமான பின் அவ்விரண்டு ரக்அத்துகளை நிறைவேற்றினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 1155)
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ «نَامَ عَنْ رَكْعَتَيِ الْفَجْرِ، فَقَضَاهُمَا بَعْدَ مَا طَلَعَتِ الشَّمْسُ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1155.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1145.
إسناده حسن رجاله ثقات عدا يزيد بن كيسان اليشكري وهو صدوق حسن الحديث ، ويعقوب بن كاسب المدني وهو صدوق يهم (جوامع الكلم)
- இப்னு அபீஹாதிம் அவர்கள், தன் தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியதாக கூறியுள்ளார்கள்: இந்த ஹதீஸ் ஃபஜ்ர் தொழுகையின் கடமையான இரண்டு ரக்அத் பற்றியது. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்வான் பின் முஆவியா இந்த ஹதீஸை சுருக்கமாக கூறியிருப்பது தவறாகும்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-244 (2/103)
- இப்னு மாஜா அவர்கள் இந்த ஹதீஸை ஃபஜ்ர் தொழுகையின் சுன்னத்தான இரண்டு ரக்அத் பற்றிய பாடத்தில் கொண்டு வந்ததும் சரியல்ல.
- இந்த ஹதீஸை முழுமையாக பார்க்க- முஸ்லிம்-1212
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்வான் பின் முஆவியா அவர்களிடமிருந்து அறிவிக்கும் இருவரில் யஃகூப் பின் ஹுமைத் பலவீனமானவர்…
மேலும் பார்க்க: முஸ்லிம்-1211 .
…
சமீப விமர்சனங்கள்