தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1154

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு தடவையா ? ” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

கைஸ் பின் அம்ர் (ரலி)

கைஸ் பின் அம்ர்-அல்அன்ஸாரீ (ரலி) – Qays bin 'Amr bin Qays

இறப்பு: ஹிஜ்ரி 3, உஹத்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: கைஸ் பின் அம்ர் பின் கைஸ் பின் ஸைத் பின் ஸவாத் பின் மாலிக் பின் ஃகன்ம் பின் மாலிக் பின் அல்நஜ்ஜார்

தந்தை பெயர்: அம்ர் பின் கைஸ் பின் ஸைத்

வம்சம்: பனூ அல்நஜ்ஜார்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 3, உஹத்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இவர் ஒரு நபித்தோழர் (ஸஹாபி) ஆவார். இவர் மதீனாவைச் சேர்ந்தவர். பத்ர் போரில் இவர் கலந்துகொண்டது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

உஹத் போரில் கலந்துகொண்டு ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு ஷஹீதாக்கப்பட்டார். இவருக்கு வாரிசுகள் இல்லை.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)


ஆதாரம்: muslimscholars.info (468) · Should verify


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ قَيْسِ بْنِ عَمْرٍو، قَالَ:

رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَاةَ الصُّبْحِ مَرَّتَيْنِ؟» فَقَالَ لَهُ الرَّجُلُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهَا، فَصَلَّيْتُهُمَا. قَالَ: فَسَكَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1154.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1144.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: அபூதாவூத்-1267.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.