பாவமான காரியத்தில் அல்லாமலும், உறவைத் துண்டிக்காமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் ஒன்று அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவருக்கு ஏற்படும் கெடுதியை விட்டு அவரைக் காப்பாற்றுகிறான்.
இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 11133)حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا عَلِيٌّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ، وَلَا قَطِيعَةُ رَحِمٍ، إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ، وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ، وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا ” قَالُوا: إِذًا نُكْثِرُ، قَالَ: «اللَّهُ أَكْثَرُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-10709.
Musnad-Ahmad-Shamila-11133.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10921.
إسناده حسن رجاله ثقات عدا علي بن نجاد الرفاعي وهو صدوق حسن الحديث
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29170 , அஹ்மத்-11133 , அல்அதபுல் முஃப்ரத்-710 , முஸ்னத் அபீ யஃலா-1019 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4368 , ஹாகிம்-1816 , …
2 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3573 .
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3381 .
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6134 .
5 . ஸைத் பின் அஸ்லம் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-576 .
6 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20558 .
சமீப விமர்சனங்கள்