தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11133

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாவமான காரியத்தில் அல்லாமலும், உறவைத் துண்டிக்காமலும்  எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் ஒன்று அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவருக்கு ஏற்படும் கெடுதியை விட்டு அவரைக் காப்பாற்றுகிறான்.

இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 11133)

حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا عَلِيٌّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ، وَلَا قَطِيعَةُ رَحِمٍ، إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ، وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ، وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا ” قَالُوا: إِذًا نُكْثِرُ، قَالَ: «اللَّهُ أَكْثَرُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-10709.
Musnad-Ahmad-Shamila-11133.
Musnad-Ahmad-Alamiah-10709.
Musnad-Ahmad-JawamiulKalim-10921.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்.

2 . அபூஆமிர்-அப்துல்மலிக் பின் அம்ர்.

3 . அலீ பின் அலீ.

4 . அபுல்முதவக்கில்-அலீ பின் தாவூத்.

5 . அபூஸயீத் (ரலி).


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30252-அலீ பின் அலீ என்பவர் பற்றி வகீஉ பின் ஜர்ராஹ், இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    முஹம்மது பின் அப்துல்லாஹ், அபூஸுர்ஆ போன்றோர் பலமானவர் எனக் கூறியுள்ளனர்.
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    பஸ்ஸார், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் சுமாரானவர் எனக் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/184)

  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இவரை குறை கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்றும், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.
  • இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் கூறினாலும் இந்த அறிவிப்பாளரை நல்லவர் எனக் கூறியுள்ளார்.
  • இவர் கத்ரியா (விதியை மறுக்கும்) கத்ரியா போன்ற மாறுபட்ட கொள்கையில் உள்ளவர் என்பதற்காக நம்பகமான எவரது ஹதீஸும் நிராகரிக்கப்படாது. பல கத்ரியாக்களின் ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் கூட உள்ளன.கொள்கையுடவர் என்பதால் சிலர் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.
  • இவர் பலவீனமானவர் என்று சொல்பவர்கள் அதற்கான காரணத்தைக் கூறாததாலும் அதிகமான அறிஞர்கள் நம்பகமானவர் எனக் கூறியுள்ளதாலும் இவர் நம்பகமானவர் என்று சிலர் கூறுகின்றனர். (இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    விமர்சனம் செய்வதில் கடும் போக்கு கொண்டவர் என்பதால் மற்றவர்கள் பலமானவர் என்று கூறியிருப்பதால் இவரின் விமர்சனம் சரியானதல்ல என்று சிலர் கூறுகின்றனர்)…..


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29170, அஹ்மத்-11133, அல்அதபுல் முஃப்ரத்-710, முஸ்னத் அபீ யஃலா-1019, அல்முஃஜமுல் அவ்ஸத்-4368, ஹாகிம்-1816, …


2 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3573.


3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3381.


4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6134.


5 . ஸைத் பின் அஸ்லம் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-576.


6 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20558.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-6340,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.