தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2926

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

2926. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்ச

நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு’ என்று கூறும்.

அறிவிப்பவர்: (ரலி)

அத்தியாயம்:56

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ القَعْقَاعِ  عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ


Bukhari-Tamil-2926.
Bukhari-TamilMisc-2926.
Bukhari-Shamila-2926.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் தக்வான் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-,


  • உமாரா பின் கஃகாஃ —> அபூஸுர்ஆ பின் அம்ர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: புகாரி-2926,


ஃகர்கத் மரத்தை பற்றி வரும் கூடுதல் தகவல் உள்ள செய்தி:

  • ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ்-ஸம்மான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-5601,


மேலும் பார்க்க: புகாரி-3593.

3 comments on Bukhari-2926

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    கருத்தின் அடிப்படையில் ஒரு செய்தியை பலவீனம் என்று கூறும்போது அது சரியானதா?என்றும் மாற்றுவிளக்கம் உள்ளதா? என்றும் பார்க்க வேண்டியிருக்கும். எனவே உடனடியாக இதுபோன்ற செய்திகளின் தரம் பதிவிட காலதாமதம் ஆகலாம்.

  2. لَا يَقُولَنَّ أَحَدُكُمْ صَمْتُ رَمَضَانَ وَلَا قُمْتُهُ كُلَّهُ.

    அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    “ஒருவர் நான் ரமளான் (முழுவதும்) நோன்பு நோற்றேன் என்றோ அந்த ரமளான் முழுவதும் நின்று தொழுதேன் என்றோ கூற வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அபூ பக்ரா(ரலி) மட்டும் அறிவிக்கும் இந்த
    வார்த்தை முன்னுக்கு பின்னாக வந்துள்ளது.

    அஹ்மதில் 5 இடத்திற்கு மேலாகவும்.
    சு ஃபுல் ஈமானில் இரண்டு இடத்திலும்.
    இப்னு ஹுஸைமா.
    குப்ரா நஸயீ
    நஸயீ, பஸ்ஸார்,

    இந்த ஹதீஸை பதிவு செய்யவும்.
    (இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.