தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-798

A- A+


ஹதீஸின் தரம்: More Info

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யார் நாற்பது நாட்கள் தொடர்ந்து இஷாத் தொழுகையின் முதல் ரக்அத் தவறிவிடாமல்  ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு நரகிலிருந்து விடுதலை என்று அல்லாஹ் எழுதிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

(இப்னுமாஜா: 798)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَقُولُ:

«مَنْ صَلَّى فِي مَسْجِدٍ جَمَاعَةً أَرْبَعِينَ لَيْلَةً، لَا تَفُوتُهُ الرَّكْعَةُ الْأُولَى مِنْ صَلَاةِ الْعِشَاءِ، كَتَبَ اللَّهُ لَهُ بِهَا عِتْقًا مِنَ النَّارِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-798.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-790.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عمارة بن غزية الأنصاري உமாரா பின் கஸிய்யா அனஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது முன்கதிஃயான செய்தி.
  • மேலும் இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம் நாட்டைசேர்ந்தவர்களிடமிருந்து அறிவித்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். உமாரா மதீனாவைச் சேர்ந்தவர் என்பதாலும் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-241 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.