தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3124

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், “ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்.

வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்.

ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்” என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார்.

ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, “நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு” என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது.

(வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர், “உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள் ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும்” என்று கூறினார்.

(உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், “உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், “உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது” என்றார்.

எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது.

பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 57

(புகாரி: 3124)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ، فَقَالَ لِقَوْمِهِ: لاَ يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ، وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا؟ وَلَمَّا يَبْنِ بِهَا، وَلاَ أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا، وَلاَ أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلاَدَهَا، فَغَزَا فَدَنَا مِنَ القَرْيَةِ صَلاَةَ العَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، فَقَالَ لِلشَّمْسِ: إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا، فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ، فَجَمَعَ الغَنَائِمَ، فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا، فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ: إِنَّ فِيكُمْ غُلُولًا، فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ، فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ، فَقَالَ: فِيكُمُ الغُلُولُ، فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ، فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلاَثَةٍ بِيَدِهِ، فَقَالَ: فِيكُمُ الغُلُولُ، فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنَ الذَّهَبِ، فَوَضَعُوهَا، فَجَاءَتِ النَّارُ، فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الغَنَائِمَ رَأَى ضَعْفَنَا، وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا


Bukhari-Tamil-3124.
Bukhari-TamilMisc-3124.
Bukhari-Shamila-3124.
Bukhari-Alamiah-2892.
Bukhari-JawamiulKalim-2908.




  • இந்தச் செய்தியை மேற்கண்டவாறு சிலர் விரிவாக அறிவித்துள்ளனர். சிலர் இதில் உள்ள சில பகுதிகளை மட்டும் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் கருத்து பற்றி விமர்சனம்:

பூமியின் சுழற்சியால் தான் இரவு, பகல் மாறிவருகிறது என்ற அடிப்படையிலும், சூரியனின் சுழற்சி பற்றி குர்ஆன் கூறும் வசனங்களின் அடிப்படையிலும் இந்தச் செய்தி குர்ஆனுக்கு முரணானாக உள்ளது என்று சிலர் விமர்சித்துள்ளனர்.

1 . (அல்குர்ஆன்: 14:33)

2 . (அல்குர்ஆன்: 31:29)

3 . (அல்குர்ஆன்: 36:40)

நிறுத்தினால் உலகம் முழுவதும் இது தெரிந்திருக்கும். இதை பதிவு செய்திருப்பார்கள்.

4 . (அல்குர்ஆன்: 55:5)

காலம் காட்டி சரியாக காலம் காட்டியிருக்காது. நோன்பு வைத்தவர்களுக்கு நேரம் அதிகமாகி இருக்கும்.

சூரியனை நிறுத்துவதை விட பூமியை நிறுத்தியிருந்தால் தான் இது சாத்தியமாகும்.


  • வேறு சிலர், சில குர்ஆன் வசனங்களை வைத்தும், சில விளக்கங்களைக் கூறியும் இந்தச் செய்தியை சரி என்று கூறுகின்றனர்.

1 . (அல்குர்ஆன்: 18:86)

2 . (அல்குர்ஆன்: 18:17)

3 . (அல்குர்ஆன்: 38:32)


شرح النووي على مسلم (12/ 52):
قَالَ الْقَاضِي اخْتُلِفَ فِي حَبْسِ الشَّمْسِ الْمَذْكُورِ هُنَا فَقِيلَ رُدَّتْ عَلَى أَدْرَاجِهَا وَقِيلَ وُقِفَتْ وَلَمْ تُرَدَّ وَقِيلَ أُبْطِئَ بِحَرَكَتِهَا ‌وَكُلُّ ‌ذَلِكَ ‌مِنْ ‌مُعْجِزَاتِ ‌النُّبُوَّةِ


تفسير الخازن لباب التأويل في معاني التنزيل (2/ 31):
قال القاضي عياض: اختلف الناس في حبس الشمس المذكور هنا فقيل: ردت إلى ورائها وقيل: وقفت ولم ترد وقيل: بطء حركتها ‌وكل ‌ذلك ‌من ‌معجزات ‌النبوة

இது நபிமார்களுக்கு வழங்கப்படும் அற்புதம் என்று வகையில் உள்ளது என்பதால் சிலர் இது பற்றி கூறப்படும் மற்ற விமர்சனங்களை பார்ப்பதில்லை.

அறிவியல் அடிப்படையில் பார்க்கும் போது, சூரியனை தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன. மற்ற கோள்கள் தனக்குரிய பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றை சூரிய குடும்பம் என்று கூறுவர். அனைத்தும் ஈர்ப்பு விசையில் இயங்கிக் கொண்டிருப்பதால் சூரியனை நிறுத்துவதினால் கூட மற்ற அனைத்து கோள்களின் இயக்கத்தை அல்லாஹ்வால் நிறுத்த முடியும்.

எனவே இது போன்ற நிகழ்வுகள் பொதுச் சட்டத்தில் வராது. விதிவிலக்கானவை. இதை மிஃராஜ் நிகழ்வோடு ஒப்பிட்டு பார்த்தாலும் புரிந்துக் கொள்ளலாம்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . முஹம்மத் பின் அலாஃ

3 . இப்னுல் முபாரக்

4 . மஃமர் பின் ராஷித்

5 . ஹம்மாம் பின் முனப்பிஹ்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹம்மாம் பின் முனப்பிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஸஹீஃபது ஹம்மாம் பின் முனப்பிஹ்-123,

صحيفة همام بن منبه (ص: 59)
123 – وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَزَا نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ فَقَالَ لِلْقَوْمِ: لَا يَتْبَعْنِي رَجُلٌ قَدْ كَانَ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا بَنَى، وَلَا آخَرُ بَنَى بِنَاءً لَهُ وَلَمَّا يَرْفَعْ سُقُفَهَا، وَلَا آخَرُ قَدِ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا، فَغَزَا فَدَنَا الْقَرْيَةَ حِينَ صُلِّيَ الْعَصْرُ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، فَقَالَ لِلشَّمْسِ: أَنْتِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ، اللَّهُمَّ احْبِسْهَا عَلَيَّ شَيْئًا، فَحُبِسَتْ عَلَيْهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ، فَجَمَعُوا مَا غَنِمُوا فَأَقْبَلَتِ النَّارُ لِتَأْكُلَهُ فَأَبَتْ أَنْ تَطْعَمَهُ، فَقَالَ: فِيكُمْ الْغُلُولُ، فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ، فَبَايَعُوهُ فَلَصِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ: فِيكُمُ الْغُلُولُ، فَلْتُبَايِعْنِي قَبِيلَتُهُ، فَبَايَعَتْهُ قَبِيلَتُهُ فَلَصِقَ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ، فَقَالَ: فِيكُمُ الْغُلُولُ، أَنْتُمْ غَلَلْتُمْ، قَالَ: فَأَخْرَجُوا لَهُ مِثْلَ رَأْسِ بَقَرَةٍ مِنْ ذَهَبٍ فَوَضَعُوهُ فِي الْمَالِ وَهُوَ بِالصَّعِيدِ فَأَقْبَلَتِ النَّارُ فَأَكَلَتْ. قَالَ: فَلَمْ تَحِلَّ الْغَنَائِمُ لِأَحَدٍ مِنْ قَبْلِنَا؛ ذَلِكَ بِأَنَّ اللَّهَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَطَيَّبَهَا لَنَا»


  • மஃமர் —> இஸ்மாயீல் பின் உமைய்யா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஸியரு அபூஇஸ்ஹாக்-483,

السير لأبي إسحاق الفزاري (ص: 264)
483 – وعَنْ مَعْمَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، أُرَاهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ عَلَيْهِ السَّلَامُ، قَالَ: ” غَزَا نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ فَقَالَ: لَا يَتْبَعْنِي رَجُلٌ قَدْ مَلَكَ بُضْعَ امْرَأَتِهِ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمْ يَبْتَنِ بِهَا، وَلَا رَجُلٌ بَنَى بِنَاءً وَلَمْ يَرْفَعْ سَقْفَهُ، وَلَا آخَرُ اشْتَرَى غَنَمًا، أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ أَوْلَادَهَا، ثُمَّ غَزَا حَتَّى دَنَا مِنَ الْقَرْيَةِ حِينَ صَلَّى الْعَصْرَ، أَوْ قَرِيبٍ مِنْ ذَلِكَ، فَقَالَ لِلشَّمْسِ: أَنْتِ مَأْمُورَةٌ، وَأَنَا مَأْمُورٌ، اللَّهُمَّ احْبِسْهَا عَلَيَّ شَيْئًا فَحُبِسَتْ عَلَيْهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعُوا مَا غَنِمُوا، فَأَقْبَلْتِ النَّارُ لِتَأْكُلَهُ، فَأَبَتْ أَنْ تَطْعَمَهُ، فَقَالَ: فِيكُمْ غُلُولٌ، فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ، فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ، فَقَالَ: فِيكُمْ غُلُولٌ، أَنْتُمْ غَلَلْتُمْ، فَأَخْرَجُوا مِثْلَ رَأْسِ الْبَقَرَةِ مِنْ ذَهَبٍ، فَوَضَعُوهُ فِي الْمَالِ، وَهُوَ بِالصَّعِيدِ، فَأَقْبَلَتِ النَّارُ فَأَكَلَتْهُ، فَلَمْ تَحِلَّ الْغَنَائِمُ لِمَنْ كَانَ قَبْلَنَا، وَذَلِكَ بِأَنَّ اللَّهَ عَلِمَ ضَعْفَنَا وَعَجْزَنَا فَطَيَّبَهَا لَنَا “


  • அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஹம்மாம் பின் முனப்பிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தஃப்ஸீரு அப்துர்ரஸ்ஸாக்-478, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9492, அஹ்மத்-8238, முஸ்லிம்-3595, முஸ்தக்ரஜ் அபூஅவானா-6603, 6604, இப்னு ஹிப்பான்-4808, குப்ரா பைஹகீ-12706, 12707,


  • அப்துல்லாஹ் பின் முபாரக் —> மஃமர் —> ஹம்மாம் பின் முனப்பிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: புகாரி-3124, 5157, முஸ்லிம்-3595, குப்ரா நஸாயீ-, அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-, …


  • கதாதா —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்ஜிஹாத்-இப்னு அபூஆஸிம்-1/140, குப்ரா நஸாயீ-8827, 11144, முஸ்தக்ரஜ் அபூஅவானா-6605, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-1071, இப்னு ஹிப்பான்-4807,


  • அல்ஜிஹாத்-இப்னு அபூஆஸிம்-1/140.

الجهاد لابن أبي عاصم (1/ 140)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ [ص:141]، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” غَزَا نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ، فَقَالَ: لَا يَصْحَبْنِي رَجُلٌ بَنَى دَارًا، وَلَمْ يَسْكُنْهَا، وَلَا رَجُلٌ تَزَوَّجَ امْرَأَةً وَلَمْ يَدْخُلْ بِهَا، وَلَا رَجُلٌ لَهُ حَاجَةٌ فِي الرُّجُوعِ “


  • உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6600, ஹாகிம்-2618,


  • ஹிஷாம் பின் ஹஸ்ஸான் —> முஹம்மத் பின் ஸீரீன் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8315, அல்மஃரிஃபது வத்தாரீக்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, தாரீகு பஃக்தாத்-, …


இந்தச் செய்தியில் இடம்பெறும் இறைத்தூதர் யார்?

சில செய்திகளின்படி இவர் யூஷஉ பின் நூன் என்று சிலர் கூறியுள்ளனர். வேறு சிலர் அந்த செய்திகளில் விமர்சனம் உள்ளது என்பதால் இதை ஆதாரமாக ஏற்பதில்லை.

(பார்க்க: அஹ்மத்-8315)

ஆனால் கஅபுல் அஹ்பார் அவர்கள், மேற்கண்ட நிகழ்வில் தொடர்புடைய நபி, யூஷஉ பின் நூன் அவர்கள் ஆவார் என்று தவ்ராத்தில் உள்ளதாக அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடம் கூறியதாக ஒரு செய்தி உள்ளது.

(விரிவாக பார்க்க: ஹாகிம்-2618)

தற்போது உள்ள பைபிளின் பழைய ஏற்பாட்டில் இவரை யோசுவா என்று கூறப்பட்டுள்ளது. யோசுவா கர்த்தரால் அழைக்கப்பட்டவர், ஆவியால் நிரப்பப்பட்டவர் என்று கூறப்பட்டிருப்பதால் கிருஸ்துவர்களின் பார்வையில் இவர் தீர்க்கதரிசி ஆவார். மேலும் இவருக்காக சூரியன் நிறுத்தப்பட்ட நிகழ்வு பைபிளின் பழைய ஏற்பாடு யோசுவா அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

யோசுவா 10:12-14, Kjv-கிங் ஜேம்ஸ் பதிப்பு

(கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுத்த நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கி: சூரியனே, நீ கிபியோனில் நில்லுங்கள்; சந்திரனே, நீ அயலோன் பள்ளத்தாக்கிலே நில்லுங்கள் என்றார். ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்குப் பழிவாங்கும் வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்படவில்லையா? அப்படியே சூரியன் வானத்தின் நடுவில் நின்று, ஒரு நாள் முழுவதும் அஸ்தமிக்கத் அவசரப்படவில்லை. அதற்கு முன்னும் பின்னும் கர்த்தர் ஒரு மனிதனுடைய சத்தத்தைக் கேட்ட அந்த நாள் இல்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் போராடினார்)

எனவே இது இஸ்ராலிய்யாத் செய்தியில் அடங்கும். இதைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சட்டம்: குர்ஆன், ஹதீஸுக்கு தோதுவானதை ஏற்கலாம். மாற்றமாக இருந்தால் ஏற்கக்கூடாது. அதல்லாதவற்றை உண்மைபடுத்தவும் கூடாது. பொய்பிக்கவும் கூடாது


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3085, முஸ்லிம்-907,


ஆய்வுக்காக:

1 . إنكار نبوة يوشع بن نون، ودرجة حديث حبس الشمس له.

2 . பைத்துல் முகத்தஸ் வெற்றியின்போது சூரியன் நிறுத்தப்பட்டதாக வரும் ஹதீஸ்.


 

5 comments on Bukhari-3124

  1. மாஷா அல்லாஹ்,நடுநிலையான ஆய்வு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக…

  2. It was narrated that Thawban, the freed slave of the Messenger of Allah (ﷺ), said:
    “The Messenger of Allah (ﷺ) said: ‘There are two groups of my Ummah whom Allah will free from the Fire: The group that invades India, and the group that will be with ‘Isa bin Maryam, peace be upon him.'”

    இந்த ஹதீஸின் தரம் மற்றும் தமிழ்ல பதிவிடவும்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.