ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.
- மனோஇச்சைப்படி (சுயலாபத்திற்கு) தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
- உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
- உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13801)حدثنا علي بن سعيد الرازي ثنا مسروق بن المرزبان ثنا محمد بن فضيل عن أبيه عن محارب بن دثار عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم :
القضاة ثلاثة قاضيان في النار وقاض في الجنة قاضي قضى بالهوى فهو في النار وقاضي قضى بغير علم فهو في النار وقاضي قضى بالحق فهو في الجنة
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13801.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13801 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3828 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .
சமீப விமர்சனங்கள்