ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பயணத்தில் தனது ஒட்டகத்தை களைப்படையச் செய்வது போன்று, ஒரு இறைநம்பிக்கையாளர் தனது ஷைத்தான்களை (எதிர்த்துப் போராடி) களைப்படையச் செய்து விடுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8940)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الْمُؤْمِنَ لَيُنْضِي شَيَاطِينَهُ، كَمَا يُنْضِي أَحَدُكُمْ بَعِيرَهُ فِي السَّفَرِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8940.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8740.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ மூளை குழம்பியதால் பலவீனமானவர், நினைவாற்றல் குறைந்தவர் என்றாலும் இவரிடமிருந்து குதைபா பின் ஸயீத் அறிவிக்கிறார்.
- இப்னு லஹீஆ மூளை குழம்புவதற்கு முன் அவரிடமிருந்து இப்னு வஹ்ப், அப்துல்லாஹ் பின் முபாரக் போன்றோர் ஹதீஸ்களை செவியேற்று எழுதி வைத்திருந்தனர். குதைபா பின் ஸயீத் அவர்கள், அந்த நூல்களில் உள்ளதை எடுத்தெழுதிய பின்பே இப்னு லஹீஆவிடம் ஹதீஸை கேட்டு ஒப்பிட்டு பார்த்து அறிவிப்பதாக கூறியுள்ளார்.
(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512)
- ஹஸன் முள்ஃபர் என்பவர் இப்னு லஹீஆ வை பற்றி தனியாக ஒரு நூலை தொகுத்துள்ளார். அவரின் முடிவும் இப்னு லஹீஆவிடமிருந்து சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் அறிவித்தால் குறைந்த பட்சம் அமல்சார்ந்த செய்திகளில் ஹஸன் என்று முடிவு செய்யலாம். ஹராம், ஹலால் விசயங்களில் ஆதாரமாக எடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.
- சிலர் இப்னு லஹீஆ வரும் அனைத்து அறிவிப்பும் பலவீனமானதே என்றும் கூறியுள்ளனர்.
- மேலும் இதில் வரும் ராவீ-45989-மூஸா பின் வர்தான் பற்றி அதிகமானோர் நம்பகமானவர், சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.
- தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரைப் பற்றி இவர் நம்பகமானவர்; சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/986) - எனவே இவரை சில அறிஞர்கள் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றே கூறியுள்ளனர்.
அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-3586)
சமீப விமர்சனங்கள்