நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, அப்பாஸே! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்குப் பத்து விஷயங்களை கற்றுக் கொடுக்கட்டுமா? அதைச் செய்தால், நீங்கள் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும், புதிய பாவங்களையும், பழைய பாவங்களையும், வேண்டுமென்றே செய்த பாவங்களையும், தவறுதலாகச் செய்த பாவங்களையும், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், இரகசியமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் இந்தப் பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நிலையில் இருக்கும் போது ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் என்று 15 தடவைகள் கூறுங்கள்.
பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவைகள் சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10 தடவைகள் அந்த தஸ்பீஹைக் கூறுங்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தாச் செய்த நிலையில் 10 தடவைகள் அந்த தஸ்பீஹைச் செய்யுங்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். பின்னர் ஸஜ்தாச் செய்து அந்த தஸ்பீஹை 10 தடவைகள் கூறுங்கள். பின்னர் தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவைகள் கூறுங்கள்.
இது ஒவ்வொரு ரக்அத்திலும் (மொத்தம்) 75ஆகும். இதை நான்கு ரக்அத்திலும் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தடவை செய்ய முடிந்தால் அவ்வாறே செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லையானால் வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு தடவை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வாழ்நாளில் ஒரு முறை செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 1297)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الْعَزِيزِ ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ أَبَانٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ : ” يَا عَبَّاسُ، يَا عَمَّاهْ، أَلَا أُعْطِيكَ، أَلَا أَمْنَحُكَ، أَلَا أَحْبُوكَ ، أَلَا أَفْعَلُ بِكَ عَشْرَ خِصَالٍ إِذَا أَنْتَ فَعَلْتَ ذَلِكَ غَفَرَ اللَّهُ لَكَ ذَنْبَكَ ؛ أَوَّلَهُ وَآخِرَهُ، قَدِيمَهُ وَحَدِيثَهُ، خَطَأَهُ وَعَمْدَهُ، صَغِيرَهُ وَكَبِيرَهُ، سِرَّهُ وَعَلَانِيَتَهُ ؟ عَشْرَ خِصَالٍ : أَنْ تُصَلِّيَ أَرْبَعَ رَكَعَاتٍ، تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ فَاتِحَةَ الْكِتَابِ وَسُورَةً، فَإِذَا فَرَغْتَ مِنَ الْقِرَاءَةِ فِي أَوَّلِ رَكْعَةٍ وَأَنْتَ قَائِمٌ قُلْتَ : سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ خَمْسَ عَشْرَةَ مَرَّةً، ثُمَّ تَرْكَعُ فَتَقُولُهَا وَأَنْتَ رَاكِعٌ عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنَ الرُّكُوعِ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَهْوِي سَاجِدًا فَتَقُولُهَا وَأَنْتَ سَاجِدٌ عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنَ السُّجُودِ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ فَتَقُولُهَا عَشْرًا، فَذَلِكَ خَمْسٌ وَسَبْعُونَ، فِي كُلِّ رَكْعَةٍ تَفْعَلُ ذَلِكَ فِي أَرْبَعِ رَكَعَاتٍ، إِنِ اسْتَطَعْتَ أَنْ تُصَلِّيَهَا فِي كُلِّ يَوْمٍ مَرَّةً فَافْعَلْ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ جُمُعَةٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ شَهْرٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ سَنَةٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي عُمُرِكَ مَرَّةً
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1105.
Abu-Dawood-Shamila-1297.
Abu-Dawood-Alamiah-1105.
Abu-Dawood-JawamiulKalim-1106.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கோளாறு உள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிடுகிறார்கள்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/983.
صدوق سيئ الحفظ
تقريب التهذيب: (1 / 983)
1 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : இப்னு மாஜா-1387 , இப்னு குஸைமா-1216 , ஹாகிம்-1192 , 1193 , 1194 , 1195 , அல்முஃஜமுல் கபீர்-11365 , 11622 , குப்ரா பைஹகீ-4916 , 4917 , 4918 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2318 , 2879 ,
2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: அபூதாவூத்-1298 .
3 . ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-5004 ,
4 . அன்ஸாரி ஒருவர் வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: அபூதாவூத்-1299 .
5 . அபூராஃபிஉ (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : திர்மிதீ-482 .
6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: ஹாகிம்-1196 .
சமீப விமர்சனங்கள்