தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3431

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே உள்ளது

பாடம்: 44

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அல்குர்ஆன்: 19:16)

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது வாக்கு பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். (அல்குர்ஆன்: 3:45)

திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித் தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன்: 3:33)

இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 3:68)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், குர்ஆனிலுள்ள, அல்லாஹ் அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் வழித் தோன்றல்களையும் இம்ரானின் வழித் தோன்றல்களையும் தேர்ந் தெடுத்துக் கொண்டான் என்னும் (அல்குர்ஆன்: 3:33) இறை வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது,

இது அவர்களிடையேயுள்ள இறை நம்பிக்கையாளர்களைக் குறிக்கும். ஏனெனில் அல்லாஹ், இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலேயே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும் (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர் (அல்குர்ஆன்: 3:68) என்று கூறுகின்றான் என்று சொன்னார்கள்.


 ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும், அவரின் மகனையும் தவிர’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு பிறகு,

‘நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்” எனவும் அவர் கூறினார். (அல்குர்ஆன்: 3:36) எனும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும்) இறை வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அத்தியாயம்: 60

(புகாரி: 3431)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى {وَاذْكُرْ فِي الكِتَابِ مَرْيَمَ إِذْ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا} [مريم: 16]

{إِذْ قَالَتِ المَلاَئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ} [آل عمران: 45] {إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ  عَلَى العَالَمِينَ} [آل عمران: 33]- إِلَى قَوْلِهِ – {يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ} [البقرة: 212] ” قَالَ ابْنُ عَبَّاسٍ: ” وَآلُ عِمْرَانَ المُؤْمِنُونَ مِنْ آلِ إِبْرَاهِيمَ، وَآلِ عِمْرَانَ، وَآلِ يَاسِينَ، وَآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: {إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ} [آل عمران: 68] وَهُمُ المُؤْمِنُونَ، وَيُقَالُ آلُ يَعْقُوبَ: أَهْلُ يَعْقُوبَ فَإِذَا صَغَّرُوا آلَ ثُمَّ رَدُّوهُ إِلَى الأَصْلِ قَالُوا: أُهَيْلٌ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«مَا مِنْ بَنِي آدَمَ مَوْلُودٌ إِلَّا يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ، غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا» ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ} [آل عمران: 36]


Bukhari-Tamil-3431.
Bukhari-TamilMisc-3431.
Bukhari-Shamila-3431.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் கருத்து பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ள சுருக்கமான விளக்கம்:

“குழந்தை பிறக்கும் போது அதை ஷைத்தான் தீண்டுகிறான்” என்பது அவன் இனிமேல் தான் வழிகெடுக்கப் போகும் மனிதர்களுக்கு, “ஒரு அடையாளக் குறியீடு” வைக்கிறான் என்பதாகும்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-8/212)


 


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-31496, அஹ்மத்-7182, 7708, புகாரி-3431, 4548முஸ்லிம்-4718, முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-6235, அல்முஃஜமுல் அவ்ஸத்-6784, …


  • ஷுஐப் பின் அபூஹம்ஸா —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-3018,


  • ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-5971, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1742,


  • அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-1072, அஹ்மத்-10773, புகாரி-3286, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-3303


  • இப்னு வஹ்ப் —> அம்ர் பின் ஹாரிஸ் —> அபூயூனுஸ்-ஸுலைம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்லிம்-4719, இப்னு ஹிப்பான்-6234,


  • அஜ்லான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இப்னுல் ஜஃத்-2807, அஹ்மத்-7879, 7915, 8254,


  • அலாஉ பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் யஃகூப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8815,


  • யஸீத் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் குஸைத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஹாகிம்-4158,


இந்தச் செய்தியின் கருத்து பற்றி தஃப்ஸீருல் கஷ்ஷாஃப் எனும் குர்ஆன் விரிவுரையின் நூலாசிரியர் ஸமக்ஷரீ அவர்களின் விளக்கம்:

[تفسير الكشاف – ومعه الانتصاف ومشاهد الإنصاف والكافي الشاف 1/ 356:]
وما يروى من الحديث «ما من مولود يولد إلا والشيطان يمسه حين يولد فيستهلّ صارخاً من مس الشيطان إياه، إلا مريم وابنها» فاللَّه أعلم بصحته.
فإن صح فمعناه أن كل مولود يطمع الشيطان في إغوائه إلا مريم وابنها، فإنهما كانا معصومين، وكذلك كل من كان في صفتهما كقوله تعالى: (لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ إِلَّا عِبادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ) واستهلاله صارخاً من مسه تخييل وتصوير لطمعه فيه، كأنه يمسه ويضرب بيده عليه ويقول: هذا ممن أغويه،
ونحوه من التخييل قول ابن الرومي:
لِمَا تُؤْذِنُ الدُّنْيَا بِهِ مِنْ صُرُوفِهَا … يَكُونُ بُكَاءُ الطِّفْلِ سَاعَةَ يُولَدُ
وأما حقيقة المس والنخس كما يتوهم أهل الحشو فكلا، ولو سلط إبليس على الناس ينخسهم لامتلأت الدنيا صراخا وعياطا مما يبلونا به من نخسه

1 . “எந்தக் குழந்தையும் பிறக்கும் போது, ஷைத்தான் அதைத் தீண்டாமல் இருப்பதில்லை; அத்தீண்டுதலின் காரணமாகவே அக்குழந்தை சத்தமிட்டு அழத் தொடங்குகிறது, மர்யம் மற்றும் அவரது மகனைத் தவிர” என்று அறிவிக்கப்படும் ஹதீஸின் உண்மைத்தன்மையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

2 . ஒருவேளை இந்த ஹதீஸின் கருத்து சரியானது என்றால், அதன் பொருள் என்னவெனில்: மர்யம் மற்றும் அவரது மகனைத் தவிர, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வழிகெடுப்பதில் ஷைத்தான் பேராசை கொள்கிறான் என்பதாகும்.

ஏனெனில், அவ்விருவரும் (பாவங்களிலிருந்து) பாதுகாக்கப்பட்டவர்கள் ஆவர். இதேபோல், அவ்விருவரின் பண்பில் இருக்கும் ஒவ்வொருவரும் அவனுடைய வழிகெடுப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே ஆவர். இதற்கு, “உன்னுடைய தூய்மையான அடியார்களைத் தவிர, அவர்கள் அனைவரையும் நான் நிச்சயமாக வழிகெடுப்பேன்” (அல்குர்ஆன்: 38: 82,83) எனும் உயர்ந்தோன் அல்லாஹ் (ஷைத்தான் பற்றிக்) குறிப்பிடும் இறைவசனம் சான்றாகும்.

இந்தச் செய்தியில் வரும் “ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை சத்தமிட்டு அழுவது என்பது, அக்குழந்தையின் மீது ஷைத்தான் கொள்ளும் பேராசையை ஒரு கற்பனையாக உருவகமாக சித்தரிப்பதே” ஆகும். அது எப்படிவெனில், ஷைத்தான் அக்குழந்தையைத் தொட்டு, தன் கையால் தட்டி, “இவனும் நான் வழிகெடுக்கப் போகிறவர்களில் ஒருவன் தான்” என்று கூறுவது போலாகும்.

இத்தகைய கற்பனை, உருவக நயத்திற்கு ஒப்பானது தான் இப்னுர் ரூமி (என்ற கவிஞரின்) இந்தக் கவிதை வரியும் ஆகும்: (கவிதை): “இந்த உலகம் தனக்கு ஏற்படுத்தவிருக்கும் மாற்று நிலைகளையும் (துன்பங்களையும்) குழந்தைக்கு அறிவிப்பதன் காரணமாகவே, அது பிறக்கும் அந்த வினாடியில் அழுகின்றது.

3 . இவ்வாறு பொருள் கொள்ளாமல், ‘அஹ்லுல் ஹஷ்வ்-வெளிப்படையான பொருளை மட்டும் பிடித்துக் கொள்ளும் மடமையாளர்கள்’ எண்ணுவது போல, இத்தீண்டுதலும் குத்துதலும் நிஜமான ஒன்று என்று கூறுவது முற்றிலும் தவறு. (அப்படியல்ல). மனிதர்களைக் குத்துவதற்கு இப்லீஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தால், அவன் நம்மைப் படுத்தும் அந்தக் குத்தலின் வேதனையினால், இந்த உலகமே கூச்சல்களாலும் கதறல்களாலும் நிரம்பிப் போயிருக்கும்!

(நூல்: தஃப்ஸீர் கஷ்ஷாஃப்-1/356)


ஃபக்ருத்தீன் அர்ராஸீ அவர்கள் முஃதஸிலா கொள்கையுடைய காழீ-அப்துல்ஜப்பார் என்பவர் கூறிய விளக்கத்தை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

[تفسير الرازي = مفاتيح الغيب أو التفسير الكبير 8/ 205:]
الْمَسْأَلَةُ الثَّانِيَةُ: ذَكَرَ الْمُفَسِّرُونَ فِي تَفْسِيرِ ذَلِكَ الْقَبُولِ الْحَسَنِ وُجُوهًا:
الْوَجْهُ الْأَوَّلُ: أَنَّهُ تَعَالَى عَصَمَهَا وَعَصَمَ وَلَدَهَا عِيسَى عليه السلام مِنْ مَسِّ الشَّيْطَانِ
رَوَى أَبُو هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا وَالشَّيْطَانُ يَمَسُّهُ حِينَ يُولَدُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ إِلَّا مَرْيَمَ وَابْنَهَا»
ثُمَّ قَالَ أَبُو هريرة: اقرؤا إِنْ شِئْتُمْ وَإِنِّي أُعِيذُها بِكَ وَذُرِّيَّتَها مِنَ الشَّيْطانِ
طَعَنَ الْقَاضِي فِي هَذَا الْخَبَرِ وَقَالَ: إِنَّهُ خَبَرُ وَاحِدٍ عَلَى خِلَافِ الدَّلِيلِ فَوَجَبَ رَدُّهُ، وَإِنَّمَا قُلْنَا: إِنَّهُ عَلَى خِلَافِ الدَّلِيلِ لِوُجُوهٍ أَحَدُهَا: أَنَّ الشَّيْطَانَ إِنَّمَا يَدْعُو إِلَى الشر من يعرف الخير والشر والصبي وليس كَذَلِكَ وَالثَّانِي: أَنَّ الشَّيْطَانَ لَوْ تَمَكَّنَ مِنْ هَذَا النَّخْسِ لَفَعَلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ مِنْ إِهْلَاكِ الصَّالِحِينَ وَإِفْسَادِ أَحْوَالِهِمْ وَالثَّالِثُ: لِمَ خُصَّ بِهَذَا الِاسْتِثْنَاءِ مَرْيَمُ وَعِيسَى عليهما السلام دُونَ سَائِرِ الْأَنْبِيَاءِ عليهم السلام الرَّابِعُ: أَنَّ ذَلِكَ النَّخْسَ لَوْ وُجِدَ بَقِيَ أَثَرُهُ، وَلَوْ بَقِيَ أَثَرُهُ لَدَامَ الصُّرَاخُ وَالْبُكَاءُ، فَلَمَّا لَمْ يَكُنْ كَذَلِكَ عَلِمْنَا بُطْلَانَهُ، وَاعْلَمْ أَنَّ هَذِهِ الْوُجُوهَ مُحْتَمَلَةٌ، وَبِأَمْثَالِهَا لَا يَجُوزُ دَفْعُ الْخَبَرِ وَاللَّهُ أَعْلَمُ.

இரண்டாவது விஷயம்:

அழகிய முறையில் அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்” என்பதன் விளக்கத்தில் விரிவுரையாளர்கள் பல கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர்:

முதல் கருத்து: அல்லாஹ் அவரையும் அவருடைய மகன் ஈஸாவையும் ஷைத்தானின் தீண்டுதலிலிருந்து பாதுகாத்தான் என்பதாகும்.

நபி  (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எந்தக் குழந்தையாக இருந்தாலும், அது பிறக்கும் போது ஷைத்தான் அதைத் தீண்டாமல் இருப்பதில்லை. ஷைத்தான் தீண்டுவதனால் தான் அது சத்தமிட்டு அழுகின்றது; மர்யமையும் அவருடைய மகனையும் தவிர. பின்னர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) கூறினார்: “நீங்கள் விரும்பினால் ‘நிச்சயமாக நான் அவரையும் அவளுடைய சந்ததிகளையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து உன்னைக் கொண்டு பாதுகாப்புக் கோருகிறேன்’ என்ற வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

காழீ (முஃதஸிலா கொள்கையுடோரின் மூத்த தலைவர்களில் ஒருவரான அப்துல்ஜப்பார்) அவர்கள் இந்த அறிவிப்பை மறுத்து, இது (கபருல் வாஹித்-அதிகமானோரால் அறிவிக்கப்படாமல்) சிலரால் அறிவிக்கப்பட்ட செய்தி என்றும், அறிவிப்பூர்வமான ஆதாரங்களுக்கு முரணாக இருப்பதால் இதை நிராகரிப்பது கட்டாயம் என்றும் கூறியுள்ளார். இது ஆதாரங்களுக்கு முரணானது என்று நாம் கூறுவதற்குக் காரணங்கள் பின்வருமாறு:

முதலாவது: நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் பருவம் உடையவர்களையே ஷைத்தான் தீமையின் பக்கம் அழைப்பான்; ஆனால் குழந்தை அப்படி இல்லை.

இரண்டாவது: ஷைத்தானுக்கு இவ்வாறு குத்துவதற்குச் சக்தி இருக்குமானால், அவன் நல்லவர்களை அழிப்பது, அவர்களின் நிலைகளைக் குலைப்பது போன்ற இதைவிடப் பெரிய காரியங்களைச் செய்திருப்பான்.

மூன்றாவது: மற்ற இறைத்தூதர்களை விட்டுவிட்டு, மர்யமிற்கும் ஈஸாவிற்கும் மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்?

நான்காவது: அத்தகைய குத்துதல் நிகழும்பட்சத்தில் அதன் தாக்கம் நீடித்திருக்க வேண்டும். அதன் தாக்கம் நீடித்திருந்தால் அழுகையும் சத்தமும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் இது தவறானது என்பதை நாம் அறிகிறோம். (இவ்வாறு காழீ-அப்துல்ஜப்பார் கூறியுள்ளார்)

ஆனால், இந்த உத்தேசக் காரணங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்த அறிவிப்பை மறுப்பது சரியாகாது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். உண்மையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

(நூல்: தஃப்ஸீருர் ராஸீ-8/205)


இந்தச் செய்தியின் கருத்தை இது இலக்கியமாக கூறப்பட்டது; நேரடி பொருள் கொள்ளக்கூடாது என்று மேற்கண்டவாறு ஸமக்ஷரீ அவர்கள் கூறியுள்ளார். இத்துடன் கூடுதலாக சில செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு ஃபக்ருத்தீன் அர்ராஸீ அவர்கள் இதை மறுக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

அறிஞர் பி.ஜே அவர்கள் இந்தச் செய்தியின் கருத்து சரியல்ல என்பதால் இதை மறுத்துள்ளார்.

பார்க்க: பிறக்கும் குழந்தைகளை ஷைத்தான் தீண்டுவதாலேயே அழுகிறது என்ற புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
4548 வது ஹதீஸ் சரியா?
.


இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் மறுப்பு:

فتح الباري لابن حجر (8/ 212 ط السلفية):
وَقَدْ طَعَنَ صَاحِبُ الْكَشَّافِ فِي مَعْنَى هَذَا الْحَدِيثِ وَتَوَقَّفَ فِي صِحَّتِهِ فَقَالَ: إِنْ صَحَّ هَذَا الْحَدِيثُ فَمَعْنَاهُ ‌أَنَّ ‌كُلَّ ‌مَوْلُودٍ ‌يَطْمَعُ ‌الشَّيْطَانُ فِي إِغْوَائِهِ إِلَّا مَرْيَمَ وَابْنَهَا فَإِنَّهُمَا كَانَا مَعْصُومَيْنِ، وَكَذَلِكَ مَنْ كَانَ فِي صِفَتِهِمَا، لِقَوْلِهِ تَعَالَى: {إِلا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ} قَالَ: وَاسْتِهْلَالُ الصَّبِيِّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ تَخْيِيلٌ لِطَمَعِهِ فِيهِ كَأَنَّهُ يَمَسُّهُ وَيَضْرِبُ بِيَدِهِ عَلَيْهِ وَيَقُولُ: هَذَا مِمَّنْ أُغْوِيهِ. وَأَمَّا صِفَةُ النَّخْسِ كَمَا يَتَوَهَّمَهُ أَهْلُ الْحَشْوِ فَلَا، وَلَوْ مَلَكَ إِبْلِيسُ عَلَى النَّاسِ نَخْسَهُمْ لَامْتَلَأَتِ الدُّنْيَا صُرَاخًا انْتَهَى.

وَكَلَامُهُ مُتَعَقَّبٌ مِنْ وُجُوهٍ، وَالَّذِي يَقْتَضِيهِ لَفْظُ الْحَدِيثِ لَا إِشْكَالَ فِي مَعْنَاهُ، وَلَا مُخَالَفَةَ لِمَا ثَبَتَ مِنْ عِصْمَةِ الْأَنْبِيَاءِ بَلْ ظَاهِرُ الْخَبَرِ أَنَّ إِبْلِيسَ مُمَكَّنٌ مِنْ مَسِّ كُلِّ مَوْلُودٍ عِنْدَ وِلَادَتِهِ، لَكِنْ مِنْ عِبَادِ اللَّهِ الْمُخْلَصِينَ لَمْ يَضُرُّهُ ذَلِكَ الْمَسُّ أَصْلًا، وَاسْتَثْنَى مِنَ الْمُخْلَصِينَ مَرْيَمَ وَابْنَهَا فَإِنَّهُ ذَهَبَ يَمَسُّ عَلَى عَادَتِهِ فَحِيلَ بَيْنَهُ وَبَيْنَ ذَلِكَ، فَهَذَا وَجْهُ الِاخْتِصَاصِ، وَلَا يَلْزَمُ مِنْهُ تَسَلُّطُهُ عَلَى غَيْرِهِمَا مِنَ الْمُخْلَصِينَ.
وَأَمَّا قَوْلُهُ: لَوْ مَلَكَ إِبْلِيسُ إِلَخْ فَلَا يَلْزَمُ مِنْ كَوْنِهِ جُعِلَ لَهُ ذَلِكَ عِنْدَ ابْتِدَاءِ الْوَضْعِ أَنْ يَسْتَمِرَّ ذَلِكَ فِي حَقِّ كُلِّ أَحَدٍ، وَقَدْ أَوْرَدَ الْفَخْرُ الرَّازِيُّ هَذَا الْإِشْكَالَ وَبَالَغَ فِي تَقْرِيرِهِ عَلَى عَادَتِهِ وَأَجْمَلَ الْجَوَابَ فَمَا زَادَ عَلَى تَقْرِيرِهِ أَنَّ الْحَدِيثَ خَبَرٌ وَاحِدٌ وَرَدَ عَلَى خِلَافِ الدَّلِيلِ، لِأَنَّ الشَّيْطَانَ إِنَّمَا يُغْوِي مَنْ يَعْرِفُ الْخَيْرَ وَالشَّرَّ، وَالْمَوْلُودُ بِخِلَافِ ذَلِكَ، وَأَنَّهُ لَوْ مُكِّنَ مِنْ هَذَا الْقَدرِ لَفَعَلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ مِنْ إِهْلَاكٍ وَإِفْسَادٍ، وَأَنَّهُ لَا اخْتِصَاصَ لِمَرْيَمَ وَعِيسَى بِذَلِكَ دُونَ غَيْرِهِمَا، إِلَى آخِرِ كَلَامِ الْكَشَّافِ. ثُمَّ أَجَابَ بِأَنَّ هَذِهِ الْوُجُوهَ مُحْتَمَلَةٌ، وَمَعَ الِاحْتِمَالِ لَا يَجُوزُ دَفْعُ الْخَبَرِ انْتَهَى، وَقَدْ فَتَحَ اللَّهُ تَعَالَى بِالْجَوَابِ كَمَا تَقَدَّمَ، وَالْجَوَابُ عَنْ إِشْكَالِ الْإِغْوَاءِ يُعْرَفُ مِمَّا تَقَدَّمَ أَيْضًا، وَحَاصِلُهُ أَنَّ ذَلِكَ جُعِلَ عَلَامَةً فِي الِابْتِدَاءِ عَلَى مَنْ يَتَمَكَّنُ مِنْ إِغْوَائِهِ، وَاللَّهُ أَعْلَمُ.

கஷ்ஷாஃப் எனும் நூலாசிரியரான ஸமக்ஷரீ அவர்களின் இந்தக் கூற்று பல கோணங்களில் மறுக்கப்பட வேண்டியதாகும்.

1 . ஏனெனில், இந்த ஹதீஸின் நேரடிச் சொல்வளம் எதை உணர்த்துகிறதோ, அதன் பொருளில் எவ்விதக் குழப்பமும் இல்லை. மேலும், நபிமார்கள் “பாவங்களைவிட்டு பாதுகாக்கப்பட்டவர்கள்” என்ற கொள்கைக்கு இது மாறுபாடானதும் அல்ல.

2 . மாறாக, இந்தச் செய்தியின் வெளிப்படையான பொருள் என்னவெனில்: இப்லீஸுக்கு ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அதனைத் தீண்டுவதற்கான ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அல்லாஹ்வின் தூய்மையான அடியார்களாக மாறுபவர்களுக்கு, அந்தத் தீண்டுதல் எவ்விதப் பாதிப்பையும் அல்லது தீங்கையும் அறவே ஏற்படுத்துவதில்லை.

3 . அத்தகைய தூய்மையான அடியார்களிலிருந்தும் மர்யம் மற்றும் அவரது மகன் (ஈஸா) ஆகிய இருவர் மட்டுமே (முற்றிலுமாகத் தீண்டப்படுவதிலிருந்து) விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், ஷைத்தான் தன் வழக்கப்படி அவ்விருவரையும் தீண்டச் சென்ற போது, அவனுக்கும் அவ்விருவருக்கும் இடையே தடை (திரை) ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இதுவே அவ்விருவருக்குரிய தனிச்சிறப்பின் அம்சமாகும். இதிலிருந்து, அவ்விருவரைத் தவிர மற்ற தூய அடியார்களின் மீது ஷைத்தான் (தீங்கு விளைவிக்கும் வகையில்) ஆதிக்கம் செலுத்திவிட்டான் என்பது அர்த்தமாகாது.

4 . மேலும், “இப்லீஸுக்கு (மனிதர்களைக் குத்தும்) அதிகாரம் இருந்தால்…” என்று தொடங்கி (உலகமே கதறலால் நிறைந்திருக்கும் என) அவர் கூறிய வாதத்திற்குப் பதில்: குழந்தை பிறக்கும் அந்த ஆரம்பத் தருணத்தில் மட்டும் ஷைத்தானுக்கு இந்தத் தீண்டுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து, அது ஒவ்வொரு மனிதனின் விஷயத்திலும் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று முடிவுக்கு வர வேண்டிய அவசியமில்லை.

அடுத்து ஃபக்ருத்தீன் ராஸீ அவர்களின் கருத்து:

ஃபக்ருத்தீன் ராஸீ அவர்கள், ஸமக்ஷரீ அவர்களின் இந்த விமர்சனத்தைக் குறிப்பிட்டுவிட்டு, தனது வழக்கமான பாணியில் அதனை மிக விரிவாகவும் வலுவாகவும் நிலைநிறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவர் சுருக்கமாகவே பதிலளித்துள்ளார்.

அவர் தன் வாதத்தில் கூடுதலாக சேர்த்த விஷயம் என்னவென்றால்: “இந்த ஹதீஸ் கபருல் வாஹித் எனும் ஒற்றை அறிவிப்பாளர்தொடரைக் கொண்ட செய்தியாகும்; இது (அறிவுப் பூர்வமான) ஆதாரத்திற்கு முரணாக வந்துள்ளது.
1 . ஏனெனில், நன்மை தீமைகளைப் பிரித்தறியத் தெரிந்தவரைத் தான் ஷைத்தான் வழிகெடுப்பான். ஆனால் பிறந்த குழந்தையோ அதற்கு நேர்மாறானது (அறியாதது).
2 . மேலும், ஷைத்தானுக்கு இந்த அளவுக்கு (தீண்டும்) அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால், அவன் இதை விடப் பெரும் அழிவுகளையும் சீர்கேடுகளையும் செய்திருப்பான்.
3 . மேலும் (அறிவுப்பூர்வமாகப் பார்த்தால்) மர்யம் மற்றும் ஈஸாவுக்கு மட்டும் இதில் தனிச்சிறப்பு இருக்க முடியாது, மற்றவர்களுக்கும் அது பொதுவானதே…” என்று ‘அல்கஷ்ஷாஃப்’ நூலின் ஆசிரியர் (ஸமக்ஷரீ) கூறியதை விளக்கும்போது குறிப்பிட்டுவிட்டு, “இந்தக் கோணங்கள் யாவும் சாத்தியக்கூறுகள் மட்டுமே; இத்தகைய சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கொண்டு, ஆதாரப்பூர்வமாக வந்த ஒரு ஹதீஸை மறுத்துவிடக் கூடாது” என்றும் பதிலளித்துள்ளார். இத்துடன் (அர்ராஸீ அவர்களின் கருத்து) முடிகிறது.

அல்லாஹ்வின் அருளால், இதற்குரிய முறையான பதிலை நாம் மேலே விவரித்துள்ளோம். மேலும் ‘வழிகெடுத்தல்’ பற்றிய விமர்சனத்திற்கு பதிலும் நாம் மேலே விளக்கியதிலிருந்தே அறியத்தக்கதாகும்.

இதன் சுருக்கமான கருத்து என்னவெனில்: பிறக்கும் போது ஷைத்தான் தீண்டும் அந்தச் செயலானது, அவன் இனிமேல் தான் வழிகெடுக்கப் போகும் மனிதர்களுக்கு ஒரு அடையாளக் குறியீடு வைக்கிறான். எனவே ஷைத்தான் இவ்வாறு தீண்டுவது அடையாளக் குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-8/212)

(குறிப்பு: சிலர் ஃபக்ருத்தீன் ராஸீ அவர்கள் இந்த ஹதீஸை மறுத்ததாக கூறியுள்ளனர். ஆனால் அவர் அப்துல்ஜப்பார் என்பவரின் கருத்தை தான் கூறியுள்ளார். அந்தக் கருத்தை ராஸீ கூறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்)


இதனுடன் சிறிது தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3180,


ஆய்வுக்காக:

.كيف نفهم حديث أن كل مولود يمسه الشيطان


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.