தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1931

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, அல்லாஹ்  மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

(திர்மிதி: 1931)

بَابُ مَا جَاءَ فِي الذَّبِّ عَنْ عِرْضِ المُسْلِمِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ أَبِي بَكْرٍ النَّهْشَلِيِّ، عَنْ مَرْزُوقٍ أَبِي بَكْرٍ التَّيْمِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ القِيَامَةِ»

وَفِي البَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1931.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1850.




إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات عدا مرزوق التيمي وهو مقبول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்ஸூக் அபூபக்ர் அத்தைமீ யார் என்ற சரியான குறிப்பு இல்லை. அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் மர்ஸூக் என்ற பெயரில் பலர் கூறப்பட்டு அவர்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் வரும் மர்ஸூக் அபூபக்ர் அத்தைமீ என்பவரின் ஆசிரியர்கள், மாணவர்கள் கூறப்படவில்லை. எனவே சிலர் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மர்ஸூக் அபூபக்ர் அத்தைமீ, மர்ஸூக் அபூ புகைர் அத்தைமீ இருவரும் ஒருவரே என்று கூறியுள்ளார். மிஸ்ஸீ இமாம் அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் சேர்த்துள்ளார்…
  • திர்மிதீ அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-1931, அஹ்மத்-2754327536 , குப்ரா பைஹகீ-16684 , இப்னு அபீஷைபா-25539 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.