தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1012

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

வாகனத்தில் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்வது வெறுப்பிற்குரியது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சிலர் வாகனத்தில் வருவதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

(திர்மிதி: 1012)

بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الرُّكُوبِ خَلْفَ الجَنَازَةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ ثَوْبَانَ قَالَ:

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا، فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ إِنَّ مَلَائِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ»

وَفِي البَاب عَنْ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، وَجَابِرِ بْنِ سَمُرَةَ.: «حَدِيثُ ثَوْبَانَ قَدْ رُوِيَ عَنْهُ مَوْقُوفًا». قَالَ مُحَمَّدٌ: «المَوْقُوفُ مِنْهُ أَصَحُّ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1012.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-931.




إسناد ضعيف فيه أبو بكر بن أبي مريم الغساني وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அபூமர்யம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-1480 , திர்மிதீ-1012 , ஹாகிம்-1315 , குப்ரா பைஹகீ-6855 , 6856 ,

மேலும் பார்க்க : ஹாகிம்-1314 .

  • சரியான ஹதீஸ்கள்:

பார்க்க : திர்மிதீ-1031 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.